Close
நவம்பர் 22, 2024 12:17 மணி

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை 86 -வது குருபூஜை விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள லேனா திருமண மண்டபத்தில் நடைபெற்ற கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரம் பிள்ளையின் 86வது குருபூஜை

புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள லேணா திருமண மண்டபத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரம் பிள்ளையின் 86 -ஆவது குரு பூஜை தினத்தை முன்னிட்டு அகில இந்திய வஉசி பேரவை சார்பில்  அவரது உருவப்படத்திற்கு இன்று மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய தேசிய சுதந்திர போராட்ட சிற்பி தியாகச்சுடர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 86- ஆவது குருபூஜையை முன்னிட்டு புதுக்கோட்டை திலகர்திடல் அருகே உள்ள லேனா திருமண மண்டபத்தில் அகில இந்திய வ. உ.சி.பேரவை மற்றும் அனைத்து வெள்ளாளர் மற்றும் வெள்ளாளர் சமூக நலச் சங்கம் சார்பில் வ. உ.சிதம்பரனாரின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

விழாவிற்கு அகில இந்திய வ.உ.சி பேரவையின் மாநில தலைவர் லே.மு. லட்சுமண பிள்ளை தலைமை வகித்தார். வேளாளர் மற்றும் வெள்ளாளர் சமூக நல சங்க நிறுவன தலைவர் மருத்துவர். ராமதாஸ் பிள்ளை மற்றும் வெள்ளாளர் மற்றும் வேளாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நிலா மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

முன்னதாக அனைத்து வெள்ளாளர் மற்றும் வேளாளர் சமூக நல சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர். பாலு வரவேற்றார்.  இந்த நிகழ்ச்சியில்,கே. ஆ.ர் ஜி. ராஜேந்திரன், ஜி .ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ராமதாஸ் பிள்ளை, பொறியாளர் துரைப்பிள்ளை, ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து, தீயணைப்பு துறை அலுவலர் சம்பத்குமார்,மேப் டைலர் வீரையா பிள்ளை.

மற்றும் செம்பைமணிப்பிள்ளை, கனகசுந்தரம்பிள்ளை, அஞ்சல் துறை பாண்டித்துரை பிள்ளை, பாலமுருகன், மாரிமுத்துபிள்ளை,ஓய்வு பெற்ற நல்லாசிரியர் மதிவாணன், மகளிர்அணி தலைவி திருமதி வனஜா ராமதாஸ் மற்றும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக  வ.உ.சி. பேரவையின் கொடியை நிர்வாகிகள் ஏற்றி வைத்தனர். முடிவில் டயர் கடை சுப்பையா பிள்ளை நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top