மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் இளம் கம்யூனிஸ்டுகளுக்கான பயிற்சிப்பட்டறை புதுக்கோட்டை கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றாது.
திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் ஏ.சரவணன் தலைமையில் நடைபெற்ற வகுப்பில் எஸ்.கவிவர்மன் உரையாற்றினார். அடையாள அரசியல் என்ற தலைப்பில் கஸ்தூரி தலைமையில் நடைபெற்ற வகுப்பில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ உரையாற்றினார்.
இந்திய வரலாற்றில் இளைஞர்கள் என்ற தலைப்பில் ஆர்.மகாதீர் தலைமையில் நடைபெற்ற வகுப்பில் மாநில கல்விக்குழு உறுப்பினர் எம்.ரெஜிஸ்குமார் உரையாற்றினார்.
கு.ஜெகன் தலைமையில் இலக்கை நோக்கி என்ற தலைப்பில் நடைபெற்ற வகுப்பில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.குமாரவேல் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன் நிறைவுரையாற்றினார். ஜெ.மாணிக்கம் நன்றி கூறினார். வகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.