Close
நவம்பர் 22, 2024 10:37 காலை

மோசடி செய்த நபர்மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு சிபிஎம் கண்டனம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டக்குழுக் கூட்டம் செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற் றது.

அரசு வேலை வாங்கித் தருவதாக தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டக்குழுக் கூட்டம் செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மாநிலக்குழு முடிவுகளை விளக்கிப் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன்  பேசியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் ஜெரால்டு என்கிற சசிகுமார்(35). இவர் தமிழ்நாடு முழுவதும் போலி பணி ஆணைகளை வழங்கி பண வசூல் வேட்டை நடத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் வறுமையில் வாடும் இளைஞர்கள்,  இளம் பெண்களிடமும் மேற்படி நபர் இத்தகைய மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், அமுதா ஐஏஎஸ், உமா மகேஸ்வரி ஐஏஎஸ், மகிழ்மதி ஐஏஎஸ், ஜெயந்தி ஐஏஎஸ், அகிலாண்டேஸ்வரி ஐஏஎஸ் எனப் பலரது கையெழுத்துக ளுடன் தமிழ்நாடு அரசு முத்திரையைப் பயன்படுத்தி போலி பணி ஆணைகளை வழங்கியுள்ளார். இதன் மூலம் மோசடி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,  மாவட்ட காவல் கண்காணிப் பாளர் வந்திதா பாண்டே ஆகியோரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், மேற்படி மோசடி நபர் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் பாதிக்கப்பட்ட மக்களையே காவல் நிலையத்திற்கு அழைத்துவந்த  துன்புறுத்தி உள்ளனர்.

காவல்துறையின் இத்தகைய தவறான நடவடிக்கைக்கு கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு கடும் கண்டனத் தைத் தெரிவித்துக்கொள்கிறது. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு மேற்படி குற்றவாளி யை கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்படி மோசடிப் பேர்வழி ஜெரால்டின் சொத்துகளை முடக்க வேண்டும். அப்பாவி மக்கள் இழந்த தொகையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற மோசடி களில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவ தற்கு தனியாக புலனாய்வுக்குழு அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும், இப்பிரச்னை தொடர்பாக தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், என்.கண்ணம்மாள், கே.சண்முகம், சி.அன்புமண வாளன், ஜி.நாகராஜன், சு.மதியகழன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top