தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி ஈரோட்டில் பொதுமக்கள் கையெழுத்து இயக்கத்தை நடத்தியது
ஈரோடு காமராஜ் சிலை அருகே நடைபெற்ற இயக்கத்தை மாநில இளைஞரணி தலைவர் எம். யுவராஜா தொடக்கி வைத்தபின்னர் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கஞ்சா கள்ளச்சாராயம் பெருகி உள்ளது கடந்த இரண்டு ஆண்டுக ளாக திமுக அரசு அதை தடுக்க எந்த நடவடிக்கை எடுக்க வில்லை அரசு நடைப்பாண்டு ரூபாய் 50, 000 கோடி டாஸ்மாக் மூலம் வருமானம ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
எனவே பார்கள் அதிகம் திறக்கப்படுகின்றன. திருமண மண்டபத்தில் கூட மது விற்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்படுகிறது. 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக கூறி, ஒவ்வொரு கடைக்கும் 20 பார் திறக்க அனுமதிக்கப் பட்டுள்ளது.
எனவே ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் பொதுமக்களிடம் 5000 கையெழுத்துக்கள் மதுவிலக்கு கோரி பெறப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் வரும் திங்கட்கிழமை சமர்ப்பிக்கப் படும். ஒட்டுமொத்தமாக தமிழக முழுவதும் பத்து லட்சம் கையெழுத்துகள் பெறப்படும்.
கடந்த 19 -ஆம் தேதி பாமக தலைவர் ஜி கே வாசன் இந்த இயக்கத்தை துவக்கி வைத்தார். கடைசியாக முதல்வர் சுற்றுப்பயணம் முடித்து வந்ததும் அவரிடம் இக் கோரிக்கை வலியுறுத்தப்படும்.
மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவுக்கு பணம் வசூலிக்கும் இயந்திரமாக செயல்படுகிறார். வருமானவரித்துறை இன்று சோதனை நடத்துகிறது முறையாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவர் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ விடியல்சேகர், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.டி. சந்திரசேகர், நிர்வாகிகள் மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் கே. ரமேஷ், இளைஞரணி மாவட்ட பொதுச்செயலர் மாயா உட்பட பலர் கலந்து கொண்டனர்