சாலையில் ஊர்வலம் வந்த மணமக்களுக்கு கல்யாண பரிசளித்து இன்ப அதிர்ச்சி அளித்தார் பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார்.
பெருந்துறை அடுத்த தோரண வாவி பகுதியை சேர்ந்தவர் நந்தினி இவருக்கும் உடுமலைப்பேட்டை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்று முடிந்து தோரணவாவியில் உள்ள மணமகள் இல்லத்திற்கு சாலையில் ஊர்வலமாக மணமக்கள் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது எதிரே வந்த பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதி மொழி குழு உறுப்பினருமான எஸ்.ஜெயக்குமார் உடனடியாக காரை நிறுத்தி மணமக்களுக்கு கல்யாண பரிசை வழங்கினார்.
இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த மணமக்கள் மகிழ்ச்சியுடன் சட்டமன்ற உறுப்பினரிடம் ஆசி பெற்றனர். திடீரென காரை நிறுத்தி எம்எல்ஏ பரிசு வழங்கியதால் ஊர்வலத்தில் வந்த உறவினர்களும் ஒரு சில நிமிடம் திகைத்து நின்ற பின்னர் மகிழ்ச்சியடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது