மணிப்பூர் கலவரத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 5 பேர் கொண்ட ஆய்வு செய்தது என்றார் அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் காதர்மொகைதீன்
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
மணிப்பூர் கலவரத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பேசுவோம்.
பெண்களை அவமானப்படுத்திவிட்டு வாழ முடியுமா இது மணிப்பூருக்கோ, இந்தியாவுக்கோ மட்டுமே உரித்தானது அல்ல. மனித குலத்துக்கே அவமானத்தைத் தரும் செயலாகும். வேதனை தருகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும்.
மணிப்பூரைப் பற்றி பிரதமர் பேசவில்லை என்கிறார்கள். அவர் எதைப் பற்றித்தான் பேசினார். வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் அடிப்படை. என்ற சிறப்பு வேறு எந்த நாட்டிற்கும் இல்லை. ஆனால், இங்குள்ள இஸ்லாமியர் களை வெட்டிக் கொல்ல வேண்டும் என இந்து அமைப்பினர் மாநாடு போட்டு பேசுகிறார்கள்.
பிரதமர் இதைக் கண்டிக்கவில்லை. நேரு பிரதமராக இருந்தபோது தில்லியில் மதக்கலவரம் ஏற்பட்ட இடத்துக்கு நேரில் சென்று கலவரதத்தைக் கட்டுப்படுத்தினார். ஆனால், பிரதமர் மோடி மணிப்பூரைப் பற்றி பேசவே மறுக்கிறார்
தேச ஒற்றுமையைக் குலைத்துக் கொண்டும், அரசியல் சாசனத்துக்கு எதிராகவும் மத்திய பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் தேச ஒற்றுமையை வலியுறுத்தியும் பாதுகாக்கவும், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெங்ளூருவில் கூடினோம்.
மத்தியில் ஆளும் கட்சியான பாஜக அரசியல் சாசனத்தை மதிக்காதவர்கள். நாங்கள் அரசியல் சாசனத்தை மதிப்ப வர்கள்.
பெங்களூரு கூட்டத்தில் பிரதமர் யார் என்பது பற்றியெல்லாம் பேசவே இல்லை. பிரதமர் பதவி மீது ஆர்வமில்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவே அறிவித்துவிட்டார். யார் யாருக்கு எத்தனை இடங்கள் என்பதைப் பற்றி இனிமேல் தான் பேசி முடிவு எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு கட்சியினருக்கும் இடையே முரண்கள் இருக்கத் தான் செய்கின்றன. அதை எல்லாம் தாண்டி, நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து இந்த அணியை தொடங்கியிருக் கிறோம்.
மேக்கேதாட்டு அணை விவகாரம் ஒரு பிரச்னையே இல்லை. அதைப் பற்றி பெங்களூருவில் பேச வேண்டியதில்லை. ஏனென்றால், கர்நாடகம் மட்டுமே முடிவெடுத்து அணையைக் கட்டிவிட முடியாது. தமிழ்நாட்டையும், புதுச்சேரியையும் அது குறித்த கருத்துகளை கேட்க வேண்டும். நமது ஒப்புதல் இல்லாமல் அணையைக் கட்ட முடியாது என்றார் காதர் மொகிதீன்.