Close
நவம்பர் 22, 2024 8:51 காலை

காவிரிக் கரையில் இருந்து.. வைகைக் கரை நோக்கி புறப்படுவோம் வாரீர்…! தொண்டர்களுக்கு மதிமுக திருச்சி தெற்கு மாவட்டம் அழைப்பு

திருச்சி

மதிமுக தெற்கு மாவட்டச்செயலர் மணவை தமிழ்மாணிக்கம்

காவிரிக் கரையில் இருந்து.. வைகைக் கரை நோக்கி புறப்படுவோம் வாரீர்…! என திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

மறுமலர்ச்சி திமுக அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115-ஆவது பிறந்த நாள் விழா மாநாடு, செப்டம்பர் 15-ல் மாடக்கூடல் மதுரையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெறுகின்றது.

கொரோனா கொடுந்துயர் காலத்திற்குப் பின்பு மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ  நடத்துகின்ற மக்கள் மாநாடு இது.

“இனஎழுச்சிப் புயல்” அண்ணன் துரை வைகோ  கழகத்தின் முதன்மைச் செயலாளர் பொறுப்பேற்று நடைபெறும் முதல் மாநாடு என்பதாலும், இந்த மாநாடு பெரும் சிறப்பு பெறுகிறது.

தலைவர் வைகோ மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தவாறு, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள்.

முப்பதாண்டு காலமாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தலைவர் வைகோ அவர்களின் பேரன்பால் மட்டுமே இயங்கிடும் இயக்கம் ஆதலால், தொண்டர்கள் தங்களது கைசெலவில் இந்த மாநாட்டிற்கு வருவது வரலாற்றுப் பெருமையாகும்.

அந்தவகையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் இம்மாதம் 7-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதிவரை திருமண அழைப்பிதழ் போல மாநாட்டிற்கு பத்திரிகை அடித்து, பழம், வெற்றிலை – பாக்கு மற்றும் பணத்துடன் அனைத்து ஒன்றிய, நகரங்களுக்கும் சென்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

இந்த அழைப்பை ஏற்று மாவட்டத்தில் இருந்து 2 பேருந்துகள், 21 வேன்கள், 30 கார்கள் என மொத்தம் 53 வாகனங்களில் மதுரை மாநாட்டிற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.

மணப்பாறை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆ.துரைராசு, மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.தங்கவேலு , அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் சாத்தனூர் ஆ.சுரேஸ், துவாக்குடி நகரச் செயலாளர் மோகன் பெரியகருப்பன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.திருமாவளவன்,

திருவெறும்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பீட்டர், மணப்பாறை நகரச் செயலாளர் எம்.கே.முத்துப்பாண்டி, மணப்பாறை வடக்கு ஒன்றியச் செயலாளர் ப.சுப்ரமணியன், வையம்பட்டி ஒன்றியச் செயலாளர் வின்சென்ட் வேதராஜ், மருங்காபுரி வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.தர்மராஜ், மருங்காபுரி தெற்கு ஒன்றியச் செயலாளர் மருதம்பட்டி எம்.நடராசன் ஆகியோர் மாநாட்டு வெற்றிக்குப் பெரிதும் கடமையாற்றி வருகின்றனர்.

அதேபோல மாவட்டக் கழக அவைத்தலைவர் எம்.ஆர்.பாலுசாமி, மாவட்டக் கழகப் பொருளாளர் வைகோ பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜன் பன்னீர்செல்வம், வைகோ சுப்பு, பெ.ஆனந்தன், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் மிசா சாக்ரடீஸ், மாநில கலைத்துறை துணைச் செயலாளர் மேட்டுக்கடை பொ.சண்முகம்.

மாநில சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலாளர் பீட்டர் (எ) ஆரோக்கியசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆ.மகுடீஸ்வரன், வழக்கறிஞர் ஹென்றி சின்னப்பன், பொதுக் குழு உறுப்பினர்கள் வி.முத்துக்கருப்பன், பா.பாதுஷா, இளம்புயல் க.அண்ணாத்துரை, வையை இராமசாமி ஆகிய அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மாநாட்டு ஆயத்தப் பணிகளில் பெரிதும் உதவினார்கள்.

இதில், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் அய்யா புலவர் க.முருகேசன் அவர்கள் தனியாக ஒரு பேருந்து ஏற்பாடு செய்திருப்பதும், மாவட்ட துணைச் செயலாளர்  புஷ்பா சுப்ரமணியன் அவர்கள் தனியாக இரண்டு வேன்களில் 50 மகளிரை அழைத்து வருவதும் பாராட்டுக்குரியது.

துவாக்குடி நகரச் செயலாளர் மோகன் பெரியகருப்பன்  முதலில் மாநாட்டு சுவர் விளம்பரம் எழுதியதும், பெரிய பேனர் வைத்ததும், வார இதழ் ஒன்றில் முழுப்பக்க விளம்பரம் தந்ததும், தற்சமயம் 1 பேருந்து 4 கார்கள் என 5 வாகனங்களில் வருவது மெச்சத்தகுந்தது.

மாநாட்டு அழைப்பிதழை நான் வழங்கியதைப் போல, திருவெறும்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பீட்டர், அவைத்தலைவர் பெ.இராமநாதன், மாவட்டப் பிரதிநிதி வைரவேல் ஆகியோர் ஒவ்வொரு கிளைச் செயலாளராகச் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியது போற்றுதலுக்குரியது.

அதேபோல, அணிகளின் நிர்வாகிகள் நா.ரேணுகாதேவி, ஆர்.ராமன், பெல் ச.மணிவண்ணன், ஜெகதீஸ், சாத்தனூர் ஆ.முகேஸ், ஆரோக்கிய ரெக்ஸ், பூங்குடி சுப்பையா, பூங்குடி சின்னையா, துவாக்குடி அ.பாத்திமா என ஒவ்வொருவரும் தமது கடமைகளை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

இப்படி கடும் உழைப்பையும், நம் கை காசையும் செலவழித்து மதுரை அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டிற்கு புறப்பட ஆயத்தமாகி வருகின்றோம். மாநாட்டுக்கு செல்லும் நாம் அனைவரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குள் புறப்பட வேண்டும்.

மதுரையில் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துவிட்டு பிற்பகல் மிகச்சரியாக 3.30 மணிக்கு மதுரை வலையன்குளம் மாநாட்டுத் திடலுக்கு வருகை தந்து, நமது தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒரே இடத்தில் அமரவேண்டும்.

மாநாட்டில் நம் தலைவர் வைகோ அவர்கள் நிறைவுப் பேருரையாற்றி முடிக்கும் வரை அதே இடத்தில் அமர்ந்து நிகழ்வுகளைக் காணவேண்டும்.இது என் வேண்டுகோள் மட்டுமல்ல, நம் முதன்மைச்செயலாளர் அண்ணன் துரை வைகோ அவர்களின் விருப்பமும் இதுதான்.

கூடினோம்..கலைந்தோம் என்ற நிலை மறுமலர்ச்சி திமுகவினருக்கு இல்லை. இருந்தபோதிலும், ஒரு சகோதரனாய் உங்களை கவனப்படுத்த வேண்டியது என் கடமை.

இலட்சத்திற்காகவும்…கோடிகளுக்காகவும் இந்தக் கூட்டம் இல்லை. இலட்சியத்திற்காகவும்…தலைவர் வைகோ அவர்களின் தாயன்புக்காகவும் மட்டுமே இருப்பவர்கள் நாம் என்பதை மதுரை அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டிலும் மெய்ப்பிப்போம்.

காவிரிக் கரையில் இருந்து புறப்பட்டு வரும் நம்மை வரவேற்க வைகைக் கரையில் நம் தலைவர் வைகோ அவர்களும், அண்ணன் துரை வைகோ அவர்களும்காத்திருக்கின்றார்கள்..!

மதுரை சித்திரைத் திருவிழா போல, ஆவணி மாதம் நடைபெறும் அண்ணாவின் மறுமலர்ச்சித் திருவிழா களைகட்டியது என மக்கள் வியக்கும் வண்ணம் குவிந்திடுவோம் வாரீர்…! என அந்த அறிக்கையில் மணவை தமிழ்மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top