பகுத்தறிவு பகலவன் என்று போற்றப்படும் பெரியாரின் பிறந்த தினத்தையொட்டி அவரது சொந்த மண்ணான ஈரோட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களின் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஈரோடு மாநகர திமுக சார்பில்… பெரியாரின் 145-வது பிறந்தநாளையொட்டி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள பெரியார் உருவச்சிலைக்கு சிலைக்கு . திமுக., மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் கட்சியினர் பங்கேற்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார், மாநில மாணவரணி துணைச்செயலாளர் வீரமணி ஜெயகுமார், தலைமைக்கழக பேச்சாளர் இளையகோபால், மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, மாவட்ட துணைச்செயலாளர்கள் செந்தில்குமார், செல்லப்பொன்னி, சின்னையன் மற்றும் அயூப், பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன், அக்னி சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்…
முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த அதிமுக நிர்வாகிகள்
முன்னாள் எம்எல்ஏ. கே.எஸ்.தென்னரசு தலைமையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அக்கட்சியினர் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
பெரியார் நகர் பகுதி அதிமுக சார்பில்…
அவைத்தலைவர் மீன் ராஜா என்கிற ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் கே.எஸ்.கோபால், மாநகர பிரதிநிதி ஆஜம், கிளைச் செயலாளர் சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
திராவிடர் கழகம் சார்பில் மாநில அமைப்பாளர் த.சண்முகம் தலைமையில் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில்…
ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர் எம்.பாலாஜி தலைமையில் விஜய் மக்கள் இயக்க மாநகரத் தவைவர் அக்கீம், சூரம்பட்டி பழனிகுமார், கோபி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஆனந்த், பவானி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் செல்வம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் செல்வன் உள்ளிட்ட பலர் இயக்கத்தின் கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில்…
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸார் சமூகநீதிக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற சநாதன எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்றனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி ஈரோடு அரசு தலைமை மருத்துமனை வழியாக பன்னீர்செல்வம் பூங்காவில் முடிவடைந்தது.
பின்னர் பெரியாரின் உருவ சிலைக்கு ஈரோடு மாநகர் மாவட்ட துணைத்தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா தலைமையில் மாவட்டப் பொறுப்பாளர் டி. திருச்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் எச்.எம்.ஜாபர்சாதிக், மாவட்டத் துணைத் தலைவர் அம்மன் மாதேஷ், பொது செயலாளர்கள் இரா கனகராஜன், ஏசி சாகுல் ஹமீது, மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவுத் தலைவர் ம. முகமது அர்சத், மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே.என்.பாட்ஷா.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஆராய்ச்சி பிரிவு தலைவர் கார்த்திக், என்.சி.டபிள்யூ.சி. மாவட்ட தலைவி ஆர்.கிருஷ்ணவேணி, தமிழ்நாடு தேசிய தொழிலாளர் (tctu) காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் குளம் எம். ராஜேந்திரன், முன்னாள் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் கே.பி.சின்னசாமி, ராஜாஜிபுரம் குமரேசன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
சமூக நீதி மக்கள் கட்சி சார்பில்..
சமூக நீதி மக்கள் கட்சியின் தலைவர் வடிவேல் ராமன் தலைமையில் மாலை அணிவித்த நிர்வாகிகள்
ஒருங்கிணைப்பாளர் வடிவேல் ராமன் தலைமையில் கட்சியின் நிர்வாகிகளும் ஊர்வலமாக வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிந்தனைச் செல்வன் தலைமையில் அக்கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைப்பினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
#செய்தி- ஈரோடு மு.ப.நாராயணசுவாமி#