உண்மையான பயனாளிகள் யாரும் விடுபட்டு விடாத வகையில் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் உள்ள குளறுபடிகளை விரைந்து சரிசெய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு பேரவைக்கூட்டம் புதுக்கோட்டையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.
பேரவைக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். பேரவையில் கலந்து கொண்டு மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் அரசியல் விளக்கவுரையாற்றினார்.
பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாடு அரசின் சிறப்பான திட்டமான மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் உள்ள சிற்சில குளறுபடிகளை விரைந்து சரிசெய்து, உண்மையான பயனாளிகள் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத நல்லிணக்கத்திற்கும், மக்கள் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் வருகின்ற 22 மற்றும் 29 தேதிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்த உள்ள பேரணிக்கு புதுக்கோட் டை மாவட்ட காவல்துறை அனுமதி அளிக்கக் கூடாது.
காஸா பகுதியில் அப்பாவி மக்களை கொன்றுகுவிக்கும் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். இருதரப்பும் போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண ஐ.நா.மன்றம் மற்றும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், என்.பொன்னி, கே.சண்முகம், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராய ணன், எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பி னர்கள், ஒன்றிய, நகரச் செயலாளர்கள், ஒன்றிய, நகரக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.