Close
நவம்பர் 21, 2024 6:56 மணி

சசிகலா திடீர் வேகம் ஏன்? எப்படி கிரகப்பிரவேசம் நடந்தது?

திருமயம்

சசியின் போயஸ் தோட்ட புதுஇல்லம்

இதுநாள்வரை சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், எப்படி கிரகப்பிரவேசம் நடந்தது?

சசிகலாவின் நடவடிக்கையில் ஏன் வேகம்? என்ற குழப்பம் வலம் வரும் நிலையில், இது குறித்து சில முக்கிய தகவல்  கிடைத்துள்ளது.

சசிகலாவின் சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை மொத்தம் 10 கோடியாகும். அதே சமயம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, சசிகலா தொடர்பான 1,520 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி வைத்த அமலாக்கத்துறை விதித்த அபராத தொகை யானது 480 கோடியாகும்.

இதைத்தான் சமீபத்தில் அடைத்திருக்கிறார் சசிகலா. இதுதான் விஷயம். அதனடிப்படையிலேயே, முடக்கப்பட்ட சொத்துக்களும் விடுவிக்கப்பட்டுள்ளன. இதைதொடர்ந்து, போயஸ்கார்டனில் ஜெயலலிதா இல்லத்துக்கு அருகே புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பங்களாவும் ரிலீஸ் செய்யப்பட்டிருக் கிறதாம்.

ஆக, அபராத தொகை 480 கோடியை அவர் கட்டி விட்டதால் சொத்துகள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன என்றே அவருக்கு நெருக்கமான தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. இத்தனை காலமும் அமைதி அரசியலை நடத்தி வந்த சசிகலா, இனி அதிரடியில் இறங்குவார் என்று தெரிகிறது விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், அதில் சசிகலாவின் பங்களிப்பும் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

கிரகப்பிரவேசம் செய்துள்ள போயஸ் பங்களாவை சிறப்பாக கட்ட வேண்டும் என்று அன்றே திட்டமிட்டிருந்தாராம் சசிகலா. 24,000 சதுர அடியில் வேதா நிலையம் உருவான நிலையில் அதைவிட பெரிதாகவே, இந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தாராம் சசிகலா.

வேதா நிலையத்தைப் போலவே கட்டிடம், ஒரு தரைதளம், 2 மேல் தளங்களுக்கு அனுமதி அப்போது வாங்கப்பட்டிருந்தது. அதாவது, கடந்த 2019 -ல் எம்பி தேர்தல் நடந்த போதே இந்த திட்டத்திற்கு சிஎம்டிஏ அனுமதி தந்துவிட்டதாக சொன்னார்கள். ஆனால், அதற்குள் சிறை செல்ல நேரிட்டது..

எனினும், சிறையிலிருந்து ரிலீஸ் ஆகி வெளியே வந்தால் சசிகலா எங்கே தங்குவார்? என்ற கேள்வி மீடியாவில் வட்டமடித்தது. எனினும், கொரோனா தொற்று தீவிரமாக இருந்ததால், பங்களாவின் பணிகள் தடைபட்டன. இறுதியில், அமலாக்கத்துறையினர், இந்த வீட்டின் முன்பு ஜப்தி செய்து நோட்டீஸ் ஒட்டிவிட்டு போனதையடுத்து, போயஸ் இல்லத்தில் மறுபடியும் குடியேறும் நிகழ்வு தடைபட்டு விட்டது.

அதனால் தான், சிறையிலிருந்து விடுதலையானதுமே தன்னுடைய அண்ணன் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டிற்குதான் சசிகலா செல்ல நேர்ந்தது. இப்போது ஒருவழியாக தன்னுடைய கனவு இல்லத்தில் நுழைந்திருக் கிறார் சசிகலா. இதற்கெல்லாம் காரணம், போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் கைவிட்டுப் போனாலும் போயஸ் கார்டனை விட்டு போகக்கூடாது என்பதில் சசிகலா ஆரம்பத்திலிருந்தே உஷாராக இருந்து வந்தது தான்…!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top