Close
செப்டம்பர் 20, 2024 1:30 காலை

ஆளுநர் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

புதுக்கோட்டை

தமிழக ஆளுநர் வருகையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ- சின்னத்துரை

ஆளுநர் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆளுநர் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் கந்தர்வ கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுவானவராகவும், பொறுப்பானவராகவும் இருக்க வேண்டியது ஆளுநர் பதவி. இந்தப் பதவியைக் கொச்சைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் பாஜகவின் பிரதிநிதியைப் போலவும், ஆர்எஸ்எஸ் கருத்துகளைப் பிரசாரம் செய்பவராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சுற்றுப் பயணம் என்கிற பெயரில் தான் செல்லும் இடகங்களில் எல்லாம் விஷமப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இதனால், தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் அவருக்கு எதிரான போராட்டங்கள் இயல்பாக நடந்து வருகிறது. அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு திங்கள்கிழமை அவர் வருகை தருவதாக இருந்தது.

புதுக்கோட்டைக்கு அவர் வருகை தருவதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்;ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

திருச்சியிலிருந்து காரைக்குடி செல்லும் புறவழிச்சாலையில் அன்னவாசல் பிரிவு ரோட்டில் கட்டியாவயல் என்னும் இடத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமை வகித்தார்.

சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மதிமுக மாவட்டச் செயலளார் எஸ்.கே.கலியமூர்;த்தி, விசிக மாவட்டச் செயலாளர் இளமதி அசோகன், சிபிஐ மாவட்டப் பொருளாளர் ஆர்.ஜீவானந்தம், காங்கிரஸ் நகரத் தலைவர் இப்ராஹிம் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக்கட்சியினர்

சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், விதொச மாவட்டச் செலாயளர் டி.சலோமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, சிபஐ சார்பில் வி.சிங்கமுத்து, க.சுந்தர்ராஜன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத் தில் பங்கேற்றனர். போலீசாரின் தடுப்புகளையும் மீறி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் 14 பெண்கள் உட்பட 64 பேரை போலீசார் கைது செய்தனர்.

எம்.சின்னதுரை எம்எல்ஏ. பேட்டி:  செய்தியாளர்களிடம் .சின்னதுரை எம்எல்ஏ கூறியதாவது: தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களையும், தமிழ் மொழியையும், தமிழர்களிள் பண்பாட்டையும், கலாசாரத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வருகிறார்.

மேலும், தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மதிக்காமலும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் கோப்புகள் மற்றும் மசோதாக்களுக்கு கையெழுத்துப் போடாமலும் அரசமைப்பு சட்டத்தின் மாண்புகளையும் மரபுகளையும் மீறிச் செயல்பட்டு வருகிறார்.

ஆளுநர் என்ற பொறுப்பான பதவிக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஆர்எஸ்எஸ், பாஜகவின் ஊதுகுழலாகச் செயல்படும் ஆளுநரை ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் வெறுக்கிறது. அதனொரு பகுதியாகத்தான புதுக்கோட்டை யிலும் இத்தகைய போராட்டத்தை நடத்துகிறோம் என்றார்.

ஆளுநரின் வருகை ரத்து: இந்நிலையில், நேரமின்மை காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு ஆளுநரின் வருகை ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாம் தெரிவித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top