Close
மே 20, 2024 6:13 மணி

அரிமளம் ஒன்றியத்தில் சிபிஎம் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை

அரிமளத்தில் நடைபெற்ற ஒன்றிய மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சியின் வளர்ச்சி நிதியளிப்பு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றிய மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சியின் வளர்ச்சி நிதியளிப்பு, அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அரிமளம் எட்டாம் மண்டகப்படியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.வி.ராமையா தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற் றினார். அவரிடம் கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ.1,50,100 வழங்கப்பட்டது.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஜி.நாகராஜன், எஸ்.ஜனார்த்தனன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.முகமதலிஜின்னா உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.அடைக்கப்பன் வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.மணி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top