தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடியதால் ஆளுநர் உரையைப் படிக்காமல் புறக்கணித்த ஆர்.என் ரவிக்கு சி பி எம்எல் மக்கள் விடுதலை மாநாட்டு விளக்க பிரசாரக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி (மா – லெ) மக்கள் விடுதலையின் ஐந்தாவது மாநாடு தஞ்சாவூர் புதுக்கோட்டை ரோடு காவேரி நகர் சுந்தர் மகாலில் பிப்ரவரி 17, 18 தேதிகளில் இரண்டு நாட்கள் நடை பெறுகிறது.
மாநாட்டின் கோரிக்கை விளக்க கூட்டம் தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை முன்பு மாவட்ட செயலாளர் இரா.அருணாச் சலம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடியதால், ஆளுநர் உரையைப் படிக்காமல் புறக்கணித்ததோடு, தொடக்கத்தில் தேசிய கீதம்தான் பாட வேண்டும் என்று சட்டமன்றக் கூட்டத் தொடரையும், தமிழ்நாட்டு மக்களையும் அவமதித்த ஆளுந ருக்கு சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநாட்டுப் பிரசாரக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் தீர்மானங்கள் நீட் தேர்வு விலக்கு, பத்தாண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள இஸ்லாமியர்கள், பட்டியல் இனத்தவர்கள் விடுதலை உள்ளிட்ட சட்டமன்ற தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதுடன், சனாதன மனுதர்மக் கொள்கைகளைப் பேசியும்,
தமிழ்நாட்டின் தொன்மைப் புலவர் திருவள்ளுவ ரையும், ‘அனைவரும் சமம்’, ‘அனைத்து உயிர்களிடத்தும் அன்பு வேண்டும்’ என்று சமதர்மக் கொள்கைகளைப் பரப்பிய வள்ளலாரையும் இந்துத்துவாவின் அடையாளம் என்றும், ஒன்றிய பாஜக அரசின் பிரதிநிதியாக தமிழ்நாட்டு உரிமை களையும் கோரிக்கைகளையும் புறக்கணித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
தமிழ்நாட்டின் மத்திய மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங் களின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழ்நாட்டு இளைஞர் களுக்கே வழங்கப்பட வேண்டும்.
கனிம, இயற்கை வளங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கே சொந்தமாக்க வேண்டும். பன்முகத் தன்மை கொண்ட இந்திய ஒன்றியத்தை ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல்,என்று ஒற்றைத் தேசமாக்கத் துடிக்கும் பாஜக அரசை வெளியேற்று வோம்.
தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைகளை வலியுறுத்தியும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், கோரிக்கைகளையும் வலியுறுத்தி, ‘எங்கள் இலட்சியம் சோசலிசத் தமிழ்நாடு’ என்கிற மைய முழக்கத்தை முன்வைத்து நடைபெறும் கட்சியின் ஐந்தாவது மாநாடு 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என்பதை விளக்கி பிரசார இயக்கம் நடத்தப்பட்டது.
தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகில் தொடங்கி மாநகரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரசார இயக்கத்தில் மக்கள் விடுதலை கட்சியின் பொதுச் செயலாளர் ர் க.சி. விடுதலைக்குமரன், எழுத்தாளர் கவிஞர் பாட்டாளி, கடலூர் மாவட்டச் செயலாளர் இராமர், தஞ்சை ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், விவசாய சங்க ஒருங்கிணைப் பாளர் ஜோதிவேல், இடதுசாரிகள் பொதுமேடைஒருங்கிணைப் பாளர் துரை மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் அருண்குமார், பாஸ்கர், கவின்குமார், கோபி, கென்னடி, பாலமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.