Close
நவம்பர் 21, 2024 9:40 காலை

திருவண்ணாமலையில் போதை பொருளுக்கு எதிராக அதிமுக மனித சங்கிலி

திருவண்ணாமலையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிராக அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றி, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய  தி. மு. க அரசு கண்டித்து, அதிமுக சார்பில் மாபெரும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 12ம் தேதி  நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய  தமிழக அரசை கண்டித்து திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் , மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் திருவண்ணாமலை காமராஜர் சிலையிலிருந்து அண்ணா நுழைவு வாயில் வரை மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன், நகர செயலாளர் செல்வம், நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், அணி அமைப்பாளர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், அதிமுக தொண்டர்கள் ,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி முழக்கங்களை எழுப்பினர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பஜார் வீதியில் தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றி போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஆரணி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு தமிழ்நாட்டை சட்ட விரோத போதை பொருட்களின் புகலிடமாக மாறி உள்ளதை தடுக்க தவறிய மாற்றாக சட்ட விரோத போதை பொருட்களின் மாபியா தலைவர்களுக்கு, , உயர்ந்த பதவியை கொடுத்து அழகு பார்க்கும் விடியா திமுக வையும், பொம்மை முதல்வர் தலைமையில் நடக்கும் அலங்கோல ஆட்சியை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி அறப்போராட்டமானது நடைபெறுகிறது என
கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top