Close
நவம்பர் 22, 2024 12:10 காலை

அதிமுக அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வாக்குகள் கேட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரசாரம்

டாக்டர் சரவணனுக்கு வாக்குகள் கேட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரசாரம்

மதுரை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வாக்குகள் கேட்டுமுன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி கொடிமங்கலம் கீழமத்தூர் துவரிமான் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், தாராப்பட்டி மக்கள் எப்போதும் அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார்கள் இந்த தேர்தல் உண்மைக்கும் பொய்க்கும் நடக்கிற தேர்தல் இந்த தாராப்பட்டி பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டிய பெண்கள் என்று பெயர் பெற்றவர்கள். இன்று அனைத்து விலைவாசிகளும் கூடிவிட்டது. மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டது. சண்டாள பாவிகள் வீட்டு வரியையும் உயர்த்தி விட்டார்கள்

சென்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக ஓட்டு கேட்கும் போது அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்கள். இப்போது தகுதி உள்ள மகளிர்க்கு மட்டும் தருவதாக கூறுகிறார்கள் அனைத்தும் பொய்யாகவே வாக்குறுதியை தருகிறார்கள்

அம்மா கொண்டு வந்த அனைத்து திட்டத்தையும் முடக்கி விட்டார்கள். ஐந்து பவுன் நகை திருப்பி தருவோம் என்று சொன்னார்கள். இதுவரை திருப்பித் தரவில்லை யாருக்கும் கொடுத்தார்களா? என்று பெண்களைப் பார்த்து கேட்கிறேன்

கல்வி கட்டணத்தை ரத்து செய்வேன் என்று சொன்னார்கள், ரத்து செய்யவில்லை. ஆடு மாடு கொடுத்ததை நிறுத்தி விட்டார்கள். அம்மா உணவகத்தை நிறுத்திவிட்டார்கள். தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். அனைத்து திட்டத்தையும் நிறுத்திவிட்டு இப்போது அதை செய்வோம் இதை செய்வோம் என பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார்கள் அவர்களை நம்பாதீர்கள்

நான் இந்த தொகுதியில் முதல் முறையாக 2011 இல் நிற்கும்போது நான் வந்த சாலை மிக மோசமான நிலையில் இருந்தது ஆனால் இன்று மதுரை மாநகராட்சிக்கு இணையாக இந்த சாலையை மாற்றியது எனது சாதனை

மேலும் இந்த தேர்தலில் நமக்கு முதலில் ஆதரவு கொடுத்தது எஸ் டிபி ஏ கட்சியினர் அவர்கள் தான் முதலில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து மிகப்பெரிய மாநாடு நடத்தி ஆதரவு கொடுத்தார்கள். ஆகையால் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்கிற இரண்டு கட்சிகளும் நம்மை ஏமாற்றுகிறது. மேலும் அவர்கள் வாயில் வடை சுடுகிறார்கள்

100 ரூபாய் கேஸ் மானியம் கொடுக்காதவர்கள் 500 ரூபாய் மானியம் எப்படி கொடுப்பார்கள் தமிழ்நாட்டில் பெண் சிசுக்கொலையை தடுத்து தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்து பெண்களை பாதுகாத்தவர் அம்மா ஆகையால் அதிகாலையில் மங்களகரமாக இந்த தாராப்பட்டி கிராமத்தில் பிரச்சாரத்தை துவங்கினால் வெற்றி நிச்சயம் என்ற சம்பிரதாயத்தை மாற்றாமல் அனைத்து மக்களும் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றியை தேடி தர வேண்டும் என்று கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top