சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒன்றியங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சிவகங்கை எம்எல்ஏ, அதிமுக மாவட்டச்செயலர் பிஆர்.செந்திநாதன், அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமை அட்டைகளை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாட்டி பழனிசாமி ஆலோசனைப்படி, அதிமுக உறுப்பினர் உரிமை அடையாள அட்டைகளை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று மாவட்டம் முழுவதும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம்,காளையார்கோவில் அருகே காஞ்சிரம் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிராமத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அதன் பின்னர் காளையார்கோவில் கிழக்கு ஒன்றியம் சார்பில் அதிமுக உறுப்பினர்களுக்கு எம்எல்ஏ-செந்தில்நாதன், உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார்.
ஏரிவயல் ஊராட்சி, காஞ்சிரம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் புல்லுக்கோட்டை சிவாஜி தலைமையில் நடைபெற்றது. அதேபோல் காளையார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமையிலும் மறவமங்கலத்தில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சிவகங்கை நகர் சார்பில் சிவகங்கைநகரில் உள்ள 27 வார்டுகளிலும் உள்ள கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு தனியார் மண்டபத்தில் நகரச் செயலாளர் என்.எம். ராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினர் அடையாள அட்டைகளை மாவட்ட செயலாளர்-எம்எல்ஏ செந்தில்நாதன் வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜி. பாஸ்கரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து காளையார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஸ்டீபன் அருள்ராஜ் தலைமையில் பாகனேரியில் உறுப்பினர் அடையாள அட்டைகளை மாவட்டச்செயலர், எம்எல்ஏ- செந்தில் நாதன் வழங்கினார்.
பின்னர், அவர் பேசுகையில், வரும் 2026 தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைய புரட்சி தமிழர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவும் மக்கள் ஆதரவு தரவேண்டும் என்று குறிப்பிட்டார்.