Close
நவம்பர் 13, 2024 1:17 காலை

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

புதுக்கோட்டை

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலைக்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வருகை தந்தார்.
வியாழக்கிழமை இரவு அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
நடிகர் விஜய் தனது அரசியல் இயக்கத்தை தற்போது தொடங்கி இருக்கிறார் ஏற்கனவே அவருக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளேன். எதிர்காலத்தில் எந்த இலக்கை நோக்கி அவர் அரசியலில் பயணிக்கிறார் என்பதை பொறுத்துதான் கருத்துக்களை சொல்ல முடியும். விஜய் கட்சியுடன் கூட்டணி சேர்வது குறித்து தேர்தல் நேரத்தில் தான் தெரிவிக்கப்படும்.
தோ்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்ற தவறியதால், திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனா். வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் உருவாக்கப்பட்ட தொண்டர்கள், அதிமுக இணைய வேண்டும் என்று குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். தற்போது அது நடந்து கொண்டிருக்கிறது. 2026க்கு முன்பாக அதிமுகவின் அனைத்து தொண்டர்களும் எழுச்சியோடு ஒன்று சேர்ந்து மீண்டும் அதிமுக ஆட்சியை நிலை நிறுத்துவார்கள்.
இனிவரும் காலங்களில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை. சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்தார்.
முன்னதாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர். உடன் திருவண்ணாமலை மாவட்ட ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top