Close
நவம்பர் 15, 2024 10:43 காலை

ரூ.1000 கோடி காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

ஜெயங்கொண்டம் அருகே காலனி தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்டந்தோறும் அரசு தி்ட்டப்பணிகளை ஆய்வு செய்யும் கள ஆய்வு நடத்தி வருகிறார். கோவையில் கடந்த 5ம்தேதி இந்த நிகழ்ச்சியை அவர் தொடங்கினார். கோவையை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சிக்கு வந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் நேரு தலைமையில் திமுகவினர் மற்றும் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். வரவேற்பு முடிந்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் நேராக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திற்கு சென்று தங்கினார்.

இன்று காலை ஜெயங்கொண்டம் மகிமை புரத்தில் ரூ.1000 கோடி மதிப்பீ்ட்டில் தைவான் நாட்டின் டீன் ஷூஸ் நிறுவனத்தின் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி்னார். இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 15 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

அதன் பின்னர் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் நேரு, சிவசங்கர், டிஆர்பி ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கட்சி நிர்வாகிளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top