Close
நவம்பர் 21, 2024 6:41 காலை

விஜய்க்கு பின்னால் மத பிரச்சார அமைப்பு: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜுன் சம்பத்.

உதயநிதி அல்லது ஜோசப் விஜய் ஆகிய இரண்டு கிறிஸ்தவர்களில் ஒருவரை எப்படியாவது முதல்வராக்க வேண்டும் என சிலர் மதப் பிரச்சாரத்தினை தொடங்கியுள்ளனர்/ விஜய்க்கு பின்னாடி சிலர் மதப் பிரச்சார அமைப்புகளில் பொறுப்புகளில் உள்ளனர்/ திமுகவிற்கும். தவெகா விற்கும் ஒரு புரிந்துணர்வு இருக்கிறது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டி உள்ளார்.

திருவள்ளூர் அடுத்த பூங்கா நகர் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்: பின்னர் இந்து மக்கள் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் இந்து மக்கள் கட்சியின் கொடியை அர்ஜுன் சம்பத் ஏற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறியதாவது:-

திருவள்ளூர் அடுத்த புள்ளரம்பாக்கம் பகுதியில் சமீபத்தில் கிருஷ்ணர் கோவில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் புள்ளராம்பாக்கம் பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட இருந்த நிலையில் அங்கு சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கூறி  காவல்துறை தடை விதித்துள்ளது

இது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது. மக்களுக்கு எதிரானது. எனவே நாங்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தற்போது புள்ளரபாக்கம் கிருஷ்ணர் கோயிலுக்கு நேரடியாக செல்வதை தவிர்க்கிறோம்

பல இடங்களில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் குறிப்பாக முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தலங்களுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத தமிழ்நாடு அரசு கோவில்களுக்கு எதிரான நடவடிக்கையை ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது

திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியத்தில் ஒரு மலைப்பகுதியை கிறிஸ்தவ மக்கள் ஆக்கிரமிப்பு செய்து சிலுவை அமைத்துள்ளனர் .ஆனால் இது போன்ற மதமாற்றங்களை தடுக்க தவறும் காவல்துறை இந்து மக்களுக்கு எதிராக செயல்படுவது கண்டனத்துக்குரியது

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று ஒரு பொது மேடையில் பேசும்போது கூட்டணி அமைய வேண்டும் என்றால் 100 கோடி ரூபாய் கேட்கும் அவலநிலை தற்போது அரசியலில் நிலவி வருகிறது என கூறி உள்ளார்.

தற்போதைய காலகட்டத்தில் கொள்கைகளுக்கும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் பெற வேண்டும் என்பதற்காக 10 முதல் 12 கோடி கொடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சரும் கூட்டணிக்காக பணம் தர வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டு உள்ளார்

கொள்கைக்காகவும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற கூட்டணி அமைக்கும் பாரதிய ஜனதா கட்சி 2026 தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும் எனவும் இந்திய நாட்டில் பல மாநிலங்களில் மெஜாரிட்டியில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கி வருகிறது

அடுத்த முதல்வர் உதயநிதி என்ற கிறிஸ்தவரா அல்லது ஜோசப் விஜய் என்ற கிறிஸ்தவரா என்ற போட்டி தற்போது நிலவுகிறது இவர்களில் ஒருவரை குறிப்பாக கிறிஸ்தவரை எப்படியாவது முதல்வராக்க வேண்டும் என ஒரு கூட்டம் தற்பொழுது மதப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

திராவிட அரசியலை தான் விஜய் முன்னெடுக்கிறார் தமிழ் தேசிய அரசியலுக்கு எதிராக இருக்கிறார். ஒரு கண்ணில் தமிழ் தேசியம் ஒரு கண்ணில் திராவிடம் என பேசுவது முற்றிலும் தவறானது இதற்கு சீமான் அண்மையில் நல்ல பதிலடி கொடுத்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top