இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு, பிறந்தநாளையொட்டி திருவள்ளூரில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
1925ம் ஆண்டு டிச.26 ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. இன்று கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு அவர்களின் நூறாவது பிறந்தநாள்
சுதந்திரப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு பிறந்தநாள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழாவை இணைந்தே கொண்டாடும் விதமாக டிசம்பர் 26 ஆம் தேதியான இன்று தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு 2025 டிசம்பர் 25ம் தேதி வரை ஓராண்டு முழுவதும் மாவட்ட தோறும் கட்சிக்கொடி ஏற்றி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்ட துவக்கமாக திருவள்ளூர் தாலுகா கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டத் துணைத் தலைவர் சரவணன் ஏற்பாட்டில் திருவள்ளூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் கட்சி கொடியை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
அதேபோல் திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்துர், பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் விவசாய சங்க தலைவருமான ஆறுமுகம் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். மேலும் அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான அதிகத்தூர்,கிளாம்பாக்கம், தண்ணீர்குளம், பேரம்பாக்கம், பிஞ்சிவாக்கம், ஆகிய பகுதிகளிலும் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.