Close
ஜனவரி 7, 2025 7:50 காலை

தமிழர் திருநாளையொட்டி புத்தாடைகளையும் அறுசுவை உணவையும் வழங்கி அசத்திய வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்

வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய சார்பில் தமிழர் திருநாளையொட்டி, 500க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளுக்கு புத்தாடைகளையும் அறுசுவை உணவையும் வழங்கி அசத்திய ஒன்றிய செயலாளர்…

மேலும் அனைவருடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்..

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் உட்பட்ட வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் சார்பில் தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் கொண்டாட்ட விழா பரந்தூர் தனியார் விடுதியில் ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு தலைமையில் கொண்டாடப்பட்டது.

இதில் செங்கரும்புகள் நட்டு புது பானையில் திமுக ஒன்றிய மகளிர் அணியினர் பச்சரிசி ,வெல்லம் உள்ளிட்டவைகளை கொண்டு பொங்கல் தயாரித்தனர்.

இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் எழிலரசன் உள்ளிட்ட மாட்டு வண்டியில் ஒன்றிய நிர்வாகிகள் புடை சூழ அழைத்து வரப்பட்டு பொங்கல் விழாவில் பொங்கலோ பொங்கல் என கூறி கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்குள்ள அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் , கிளை நிர்வாகிகள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்வில் வரும் தமிழர் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டை அனைவரும் கொண்டாடி மகிழவும், இதேபோன்று தொடர்ந்து கட்சி பணிகளை திறம்பட செய்து வரும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் தமிழர் திருநாளை கொண்டாடும் வகையில் புத்தாடைகள், அறுசுவை விருந்து என அனைவருக்கும் அளித்து அசத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top