Close
ஜனவரி 22, 2025 9:02 காலை

மாநில கட்சிகளை அதிர வைத்த பாஜக

டெல்லி சட்டசபை தேர்தலில் மாநில கட்சிகளின் வாக்குறுதிகளை மிஞ்சும் வகையில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் கலங்கடித்து வருகிறது.

டெல்லியில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு கே.ஜி (கிண்டர் கார்டன்) முதல் பி.ஜி (போஸ்ட் கிராஜுவேட்) வரை இலவசக் கல்வி வழங்குவோம் என்று பாஜக புதிய வாக்குறுதி வெளியிட்டுள்ளது.

பா.ஜ.க., தேர்தல் அறிக்கையின் முதல் பகுதியை நட்டா வெளியிட்டார். அப்போது அவர், “பெண்களின் செழிப்புக்கான திட்டம் (மகிளா சம்ரிதி யோஜனா) மூலம் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.21,000 உதவித் தொகை வழங்கப்படும். பாஜக ஆட்சி அமைந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்படும்.

மேலும், எல்பிஜி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் கிடைக்கும். ஹோலி மற்றும் தீபாவளிக்கு அவர்களுக்கு தலா ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், ஏழை எளிய மக்களுக்காக ரூ.5-க்கு சத்தான உணவு வழங்க அடல் கேன்டீன்கள் அமைக்கப்படும் என்றும், 60 முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 ஓய்வூதியமும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியமும் வழங்கப்படும் என்றும் நட்டா கூறினார்.

இந்த வாக்குறுதிகள் டெல்லி யூனியன் பிரதேசத்தில் பரபரப்பான பேசுபொருளாக மாறி உள்ளது. டெல்லியில் போட்டியிடும் இதர மாநில கட்சிகளையும் இந்த வாக்குறுதிகள் அதிர வைத்துள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top