கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை கருத்தில் கொண்டு கொள்முதல் செய்ய வேண்டுமென ஏஐடியூசி கோரிக்கை விடுத்துள்ளதப.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்கம் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கங்களின் நிர்வாக குழு கூட்டம் சுமைசங்க மாநிலத் தலைவர் அ. சாமிக்கண்ணு, தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ். சிவானந் தம் ஆகியோர் தலைமையில் 17~4~2022 தஞ்சை சங்க அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் நெல் கொள்முதலில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளடக்கிய பகுதிகளில் அரசியல் பின்புலத்துடன் உள்ள ஊழல் அதிகாரிகளின் நடவடிக்கைகளால் முறையாக செய்யாமல் பெருமளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சில கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெற்றுக்கொண்டு விரைந்து இயக்கம் செய்வதும் , சில கொள்முதல் நிலையங்க ளில் மாதக்கணக்கில் இருப்பு இருப்பதுமான நிலை இருக்கி றது. இது குறித்து விரிவான விசாரணை செய்து சம்பந்தப்பட்ட ஊழல் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிய சாக்குகளை மாற்றி அனுப்பபடுகிறது அந்த வீணான சாக்கை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். கிடங்குகளில் ,சேமிப்பு நிலையங்களில் ஏற்றுக்கூலி மெட்ரிக் டன்னிற்கு நிர்ணயிக்கப்பட்டு வழங்கும் முறையை கைவிட்டு மூட்டைக்கு ரூபாய் ஐந்து என கூலி நிர்ணயித்து வழங்க வேண்டும்.
மத்திய அரசு 44 சட்டங்களை 4 தொகுப்புகளாக்கி தொழிலாளர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை கைவிடக்கோரி தமிழகத்திலும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நின்று போராடுகின்ற நிலையில் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை அதிகாரிகள் மேற்கண்ட சட்டத்தை அமல் படுத்துவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்
இது கண்டனத்துக்குரியது. தமிழக அரசு உடனடியாக இதை தடுத்து நிறுத்தி வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமுல்படுத்தாதது போல் தமிழகத்தில் இந்த சட்டத் தொகுப் பை அமல்படுத்த மறுக்க வேண்டும். இதனை கண்டித்து ஏஐடியூசி சார்பாக வருகிற 22~4~ 22 அன்று மாநிலம் முழுதும் நடைபெறுகின்றன ஆர்ப்பாட்டங்களில் திரளாக கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது