Close
மே 11, 2024 4:48 காலை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில இணைய தள பயிற்சி

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில அளவிலான இணையதள ஒருங்கிணைப்பு பயிற்சி முகாம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில அளவிலான இணையதள ஒருங்கிணைப்பு பயிற்சி முகாம் ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை ஆர்.கே. நினைவகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தொடங்கி வைத்து உரையாற்றினார். ‘சமூக ஊடகத்தின் அரசியல் தாக்கம்’ என்ற தலைப்பில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.கண்ணன், ‘உள்ளடக்கம் மற்றும் எதிர்வினைகள்’ என்ற தலைப்பில் மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன் ஆகியோர் பேசினர்.

தொழில் நுட்பம்-போஸ்டர் டிசைனிங் குறித்து சந்தியா ராகினி, வீடியோகிராபி  குறித்து மதன்ராஜ் ஆகியோர் விளக்கவுரையாற்றினார். விவாதத்திற்கான அறிக்கையை முன்மொழிந்து கன்வீனர் சுதிர் பேசினார்.

இரண்டாம் நாள் நடைபெற்ற முகாமில் போலிச் செய்திகள் குறித்து ராம்குமார் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் பேசினர். மத்தியக்குழு வழிகாட்டுதல் ஒருங்கிணைப்பு பற்றி நீலாம்பரன் பேசினார்.

பயிற்சி முகாமை நிறைவு செய்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். முகாமில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top