Close
செப்டம்பர் 20, 2024 1:22 காலை

புறம்போக்குநிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கக்கோரி சிபிஎம் கட்சியினர் போராட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

புறம்போக்குகளில் குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு
பட்டா வழங்ககோரி ஆயிரக்கணக்கானோர் மனுக்கொடுத்து போராட்டம்.

 புறம்போக்கு நிலங்களில் குடியிருந்துவரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில்  நடத்திய மனுக்கொடுக்கும் போராட்டத்தில்  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அரசுக்கு பயன்பாடற்ற பல்வேறு வகைப் புறம்போக்குகளில் வசிப்பவர்களை நீதிமன்ற உத்தரவைக் காட்டி அப்புறப்படுத்    துவதை கைவிட வேண்டும். அத்தகை இடங்களை உரிய வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். வாடகை வீட்டில் குடியிருந்து வரும் ஏழைகளுக்கு வீடும், வீட்டுமனைப் பட்டாவும் வழங்க வேண்டும்.

நகர்புற வீட்டுவசதித் திட்டத்தில் ஏழை மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் தாலுகா அலுவலகங் களில் மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்த்திற்கு புதுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் டி.லட்சாதிபதி, நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், எஸ்.ஜனார்த்தனன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் க.முகமதலிஜின்னா, சி.மாரிக்கண்ணு, அ.மணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் வீட்டுமனைப் பட்டாவும் வீடும் கேட்டு மனு அளித்தனர்.

கந்கர்வகோட்டை தாலுகா அலுவகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க மண்டலத் தலைவர்  கே.கார்த்திக்கேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் மனு அளித்தனர்.

அறந்தாங்கியில் நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆலங்குடியில் திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், கிழக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிவண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் பி.சுசீலா, நகரச் செயலாளர் ஏ.ஆர்;.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்ற போராட்டத்தில் 75 பேர் மனு அளித்தனர்.

ஆவுடையார்கோவிலில் ஒன்றியச் செயலாளர் நெருப்பு முருகே~; தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மனுக்கொடுத்தனர். பொன்னமராவதியில்  ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இலுப்பூரில் அன்னவாசல் ஒன்றியச் செயலளார் எம்.ஆர்.சுப்பையா தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் டி.சலோமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விராலிமலையில் ஒன்றியச் செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் உ;ளளிட்டோர் பங்கேற்றனர். மணமேல்குடியில் ஒன்றியச் செயலாளர் கரு.ராமநாதன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top