Close
மே 20, 2024 3:54 மணி

புதுக்கோட்டை மாதர் சங்க அரசியல் பயிற்சி வகுப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான ஒருநாள் அரசியல் பயிற்சி வகுப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான ஒருநாள் அரசியல் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

புதுக்கோட்டை ஆர்.கே. நினைவகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்புக்கு மாதர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் எஸ்.பண்டிச் செல்வி தலைமை வகித்தார்.

வகுப்பில் கலந்து கொண்டு ‘இன்றைய இந்தியாவில் பெண்க ளும், மாதர் சங்கமும்’ என்ற தலைப்பில் மாநில செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் உரையாற்றினார்.

‘புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள்’ என்ற தலைப்பில் மாவட்ட துணைத் தலைவர் டி.சலோமி, ‘ஸ்தாபன விரிவாக் கம்’ என்ற தலைப்பில் மாவட்டச் செயலாளர் பி.சுசிலா ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக மாவட்டப் துணைச் செயலாளர் ஆர்.கவிதா வரவேற்றார். பொருளாளர் ஜெ.வைகைராணி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top