Close
அக்டோபர் 5, 2024 6:54 மணி

நவ.18, 19 -ல் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: தஞ்சாவூர் ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல் மேற்கொள்ள ஏதுவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின் படி. கடந்த 04.11.2023(சனிக் கிழமை) மற்றும் 05.11.2023 (ஞாயிற்று கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு வாக்காளர்கள் பட்டியலில் வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்திட பொது மக்களின் வசதிக்காக சிறப்பு முகாம்கள் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 2308 வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்றது.

இச்சிறப்பு முகாம்களில் படிவம் 6 -இல் 15723 படிவங்களும், படிவம் 64 – இல் 05 படிவங்களும். படிவம் 68 -இல் 165 படிவங்களும், படிவம் 7 -இல் 1988 படிவங்களும் மற்றும் படிவம் 8 -இல் 8859 படிவங்களும் ஆக கூடுதலாக 26740 படிவங்கள் பெறப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற சிறப்பு முகாம்களை, இந்திய தேர்தல் ஆணையத்தால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக (Electoral Roll Observer) நியமனம் செய்யப்பட்டுள்ள வேளாண்மைத் துறையின் ஆணையர்  சுப்ரமணியன் பார்வையிட்டார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் 170.திருவிடைமருதூர். 171.கும்பகோணம், 172.பாபநாசம் மற்றும் 173.திருவையாறு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளத் தவறிய பொது மக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க. நீக்கம் திருத்தம் மற்றும் வாக்காளர் அடையான அட்டையுடன் ஆதார் எண் இணைத்திட எதிர்வரும் 18.11.2023 (சனிக் கிழமை) மற்றும் 19.11.2023 (ஞாயிற்று கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், நேரடியாக விண்ணப்பிக்க இயலாத வாக்காளர்கள் NVSP Portal என்ற இணையதளம் மற்றும் Voters Helpline என்ற App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் இது குறித்த மேலும் விபரங்கள் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-ல் தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top