வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல் மேற்கொள்ள ஏதுவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, கடந்த 25.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 26.11.2023 (ஞாயிற்றுகிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு வாக்காளர்கள் பட்டியலில் வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்திட பொது மக்களின் வசதிக்காக சிறப்பு முகாம்கள் தஞசாவூர் மாவட்டத்திலுள்ள 2308 வாக்குச் சாவடிகளிலும் நடைபெற்றது.
கடந்த 26.11.2023 (ஞாயிற்றுகிழமை) முடிய படிவம் 6 -இல் 26,910 படிவங்களும், படிவம் 6ஏ -இல் 08 படிவங்களும், படிவம் 7 -இல் 3520 படிவங்களும் மற்றும் படிவம் 8 -இல் 15,554 படிவங்களும் ஆக கூடுதலாக 45,992 படிவங்கள் பெறப்பட்டது. 09.12.2023 வரை வரைவு வாக்காளர் பட்டியல் மீதான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்டு 26.12.2023 –க்குள் நடவடிக்கை எடுத்து முடிக்கப்படும்.
மேலும், மேற்படி முகாமினை பயன்படுத்தி கொள்ள இயலாத வாக்காளர்கள் அலுவலக வேலை நாட்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் 09.12.2023 வரை காலை 10. மணி முதல் மாலை 5.45 மணிவரை தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்து வழங்க லாம்.
நேரில் சென்று படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள் www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் Voters Help Line என்ற Mobile App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம், இது தொடர்பாக மேலும் விவரங்கள்அறிய 1950 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 10. மணி முதல் மாலை 05.45மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் எதிர் வரும் 05.01.2024 (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிடப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.