புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்கம் அளிக்கும் மையம் திறக்கப்பட்டது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையில் முதல் நிலை சோதனை முடிவுற்ற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (3277 Ballot Unit, 2106 Control Unit, 2390 VVPAT) லிருந்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக சமீபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவரால் திறக்கப்பட்டு 6 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களான 94 Ballot Unit, 94 Control Unit 94 VVPATs எடுத்து புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களிலும், கந்தர்வகோட்டை, திருமயம் மற்றும் ஆலங்குடி ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக த்தில், பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது எவ்வாறு, நாம் செலுத்திய வாக்கினை யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்ப்பது என்பது குறித்து அறிந்து கொள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்கம் மையத்தினை (evm demonstration center) மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த செயல்முறை விளக்கம் மையம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் இன்று முதல் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் வரை செயல்பட உள்ளது.
வாக்காளர் கள் இந்த செயல்முறை விளக்க மையத்தினை பயன்படுத்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த செயல்முறை விளக்க மையம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் செயல்படும்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ.சோனை கருப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.