ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., வேட்பாளர்கள் 4 பேர் உள்பட 46 பேர் மீது வழக்கு
ஈரோடு மாநகராட்சி 4 -ஆவது மண்டல அலுவலகத்தில் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களின் பரிசீலனை நடந்தது.
அப்போது, 40-ஆவது வார்டு சுயேட்சை வேட்பாளர் பிரபு, 41 -ஆவது வார்டில் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட சாந்தி, 51-ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் காஞ்சனா, அவரது மாற்று வேட்பாளர் கள் கலா ஆகியோரின் வேட்பு மனுக்கள், மாநக ராட்சியில் கடை குத்தகைக்கு எடுத்துள்ளகாரணத் துக்காக நிராகரிக்கப்பட்டது.
வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து வேட்பாளர்கள் தர்ணா, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், அவரது ஆதரவாளர்கள் 40 பேர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரிவு அலுவலர்கள், ஈரோடு தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் சுயேட்சை வேட்பாளர் பிரபு, 4 அதிமுக வேட்பாளர்கள் உட்பட 6 பேர் மீது அரசு 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல், அதிமுக வேட்பாளர்களின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் 40 பேர் மீதும்வழக்கு பதிவு செய்தனர்.