Close
மே 20, 2024 2:31 மணி

புதுக்கோட்டை நகராட்சி 36 வது வார்டில் வீடு வீடாக பிரசாரம் செய்த திமுக வேட்பாளர் வளர்மதி சாத்தையா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை 36 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வளர்மதிசாத்தையா

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட  36-ஆவது வார்டில் திமுக வேட்பாளராக எஸ்.வளர்மதி சாத்தையா  ஞாயிற்றுக்கிழமை பூங்காநகர் பெரியார் நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் 36 – ஆவது வார்டு போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ். வளர்மதி சாத்தையா,  பூங்கா நகர் பெரியார் நகர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து புதிய உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நமது வார்டு பகுதிகளில் அடிப்படை தேவை கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை குறிப்பாக இந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இனிவரும் காலங்களில் தினந்தோறும் இந்த பகுதி மக்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க வழிவகை மேற்கொள்வேன் இது தவிர பல்வேறு பகுதிகளில் தெரு விளக்குகள் எரியவில்லை மேலும் குப்பைகள் அள்ளப் படாமல் உள்ளது.

சில பகுதிகளில் சாலையின் உயரத்தை விட வீட்டு மனைகளின் உயரம் மிகவும் தாழ்வாக உள்ளது இதனால் மழைக்காலங்களில் மழை வெள்ள நீர் வடியாமல் வீடுகளின் உள்பகுதி களில் மழைநீர் தேங்கி வெளியேற முடியாமல் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். அவர்களுக்காக வெள்ள நீர் வடியும் வகையில் குழாய்களை அமைத்து குடியிருப் புகளை சூழும் மழை வெள்ள நீர் தாழ்வான பகுதி களை நோக்கி பாயும் வகையில் வகையில் நடவடிக்கை மேற்கொள்வேன்.

பொதுமக்களின் குறைகளை களைய எனது வார்டு பகுதிகளில் 24 மணி நேரமும் செயல் படும் நகராட்சி வார்டு அலுவலகம் அமைத்து பொது மக்களின் குறைகளை போக்குவேன்.

மேலும் இரவு நேரங்களில் திருட்டு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகள் இருந்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வீதிகள் தோறும் சிசிடிவி கேமரா அமைக்க முயற்சி செய்வேன் என்றார் திமுக வேட்பாளர் வளர்மதி சாத்தையா கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top