ஈரோடு மாநகராட்சி 60 வார்டுகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. இதில் 51 -ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் விஜயலட்சுமி , அதிமுக சார்பில் காஞ்சனா , நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஸ்வரி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இருவர் என மொத்தம் 6 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதில் வேட்பு மனு பரிசீலனையின் போது ஈரோடு மாநகராட்சி காய்கறி சந்தையில் கடை வைத்திருப்பதாக கூறி அதிமுக வேட்பாளர் காஞ்சனா மற்றும் அதிமுக மாற்று வேட்பாளர் கலா மற்றும் , வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் சுயேட்சை வேட்பாளர் சங்கீதா ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் இன்று வேட்பு மனுவை நாம் தமிழர் கட்சி மகேஸ்வரி மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஆகிய இருவரும் இன்று தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இதனைத்தொடர்ந்து, திமுக வேட்பாளர் விஜயலட்சுமி போட்டியின்றி மாநகராட்சி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை விஜயலட்சுமியிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் வி.சி. சந்திரகுமார் , திமுக நகர செயலாளர் சுப்பிரமணியம் , திமுக பகுதிச்செயலாளர் அக்னி சந்துரு , திமுக பிரதிநிதி மணி ஆகியோர் கலந்து கொண்டனர்