நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதுக்கோட்டை நகராட்சியின் 19 -ஆவது வார்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.ராஜேஸ்வரி வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 50 % இடங்களை மகளிருக்கு ஒதுக்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 189 இடங்களில் 2 இடங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட தைத் தவிர்த்து, 187 இடங்களுக்கு பிப்.19 -இல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கு மொத்தம் 902 வேட்பாளர்கள் களத்தில் மோதுகின்றனர்.
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டு களில் 21 வார்டுகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள் ளது. இதில், திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர் போட்டி யிடுகின்றனர். இதில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அமைந் துள்ள மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 19 -ஆவது வார்டில் போட்டியிடும் ஆர்.ராஜேஸ்வரி தனது வார்டுக்குள்பட்ட கல்யாணராமபுரம் 1 மற்றும் 2 ஆம் வீதிகளில் வீடு வீடாகச்சென்று கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் சென்று பிரசாரம் செய்தனர்.