Close
மே 12, 2024 8:29 காலை

வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்: சீமான்

தமிழ்நாடு

நாம்தமிழர் சீமான்

மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  தெரிவித்தார்.
வடசென்னை மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அமுதினியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெள்ளிக்கிழமை திருவொற்றியூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது சீமான் பேசியது,
 திமுக,அதிமுக, பாஜக கூட்டணிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் நூறு கோடி ரூபாய் வரை பணம் செலவிட திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர்.  ஏற்கெனவே கோடிக்கணக்கான ரூபாய் வாக்கு சேகரிப்பு, பிரசாரம் என்ற பெயரில்   இக்கட்சிகளின் வேட்பாளர்கள் தொடர்ந்து செலவிட்டு வருகின்றனர்.
இவர்களோடு போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தேர்தல் செலவிற்கே பணம் இல்லாமல் திண்டாடுகின்றனர்.  பொதுமக்கள் கொடுக்கும் நன்கொடை மூலமாகவே அன்றாட தேர்தல் செலவினங்களை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்காக பணம்  இக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன இதற்காக வாக்காளர் யார் யார் எங்கு உள்ளனர் என்ற பட்டியலை தயார் நிலையில் இக்கட்சிகள் வைத்துள்ளனர்.
இந்த இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இந்தியாவை காப்பாற்றுவதற்கு தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தொடர் விளம்பரம் செய்து வருகிறார்.அப்படி ஒன்றும் இந்தியாவிற்கு பேராபத்து ஏற்பட்டுவிடவில்லை. தேர்தலுக்காக இவ்வாறு பொய் பிரச்சாரத்தில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.
எதுகை மோனை வழக்குச் சொல் அடிப்படையில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மீண்டும் எதற்கு மோடி வேண்டும் என்பதற்கு பாஜகவினரிடம் பதில் இல்லை. காவிரி நதிநீர் பிரச்சனையில் பாஜக காங்கிரஸ் கட்சியினர் கர்நாடகத்தின் நலன் கருதி  தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகின்றனர். எனவே தமிழக வாக்காளர்கள் இந்த இரண்டு கட்சிகள் இடம் பெறும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்றார் சீமான்.
 நிகழ்ச்சியில் சாட்டை முருகன், திருவொற்றியூர் தொகுதி பொறுப்பாளர் ஆர் கோகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top