Close
மே 20, 2024 9:21 மணி

குடியாத்தத்தில் ஏசிஎஸ் கல்விக் குழுமம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

குடியாத்தத்தில் ஏசிஎஸ் கல்விக் குழுமம் சார்பில் 100% வாக்கு பதிவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியினை துவக்கி வைத்து, பரிசுகள் வழங்கினார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் புதிய நீதிக் கட்சியின் சார்பில் 100% வாக்கு பதிவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டியை , புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமையில் குடியாத்தம் அபிராமி கல்லூரியில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த மாரத்தான் போட்டிக்கான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி காவல்துறை பாதுகாப்புடன் அபிராமி கல்லூரியில் இருந்து ராஜகோபால் பாலிடெக்னிக் திருமகள் ஆலைக்கல்லூரி அம்பேத்கர் சிலை வழியாக பாபு திருமண மண்டபம் வரை இப்போட்டி நடைபெற்றது.

புதிய நீதி கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கு நடந்தப்பட்ட இந்த விழிப்புணர்வு ஓட்டப்பந்தயத்தில் குழந்தை முதல் பெரியோர்கள் வரை சுமார் 750 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 30,000, 2ம் பரிசாக 20,000, 3ம் பரிசாக 10000, ஆகியோரை பாராட்டி பரிசுகளையும் கேடயங்களும் வழங்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக வெற்றிப் பெற்ற பெண்களுக்கு முதல் பரிசாக 30.000, 2ம் பரிசாக 20.000, 3ம் பரிசாக 10.000, அடுத்தடுத்து ஆறுதல் பரிசாக ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் என தேர்வு செய்து பத்து நபர்களுக்கு பரிசாக தலா ஒவ்வொருவருக்கும் ஐந்தாயிரம் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இந்த மாரத்தான் போட்டி விழாவிற்கான ஏற்பாடுகளை ஏ.சி.எஸ் கல்லூரிகளின் தலைவர் அருண்குமார், செயலாளர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் புதிய நீதி கட்சி வேலூர் மாவட்ட தலைவர், செயலாளர், மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புதிய நீதிக் கட்சியின் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை சிறப்பித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top