Close
நவம்பர் 21, 2024 11:39 மணி

தேர்தல் பணியாளர்களுக்கு ஈரோட்டில் 2-ஆம் கட்ட பயிற்சி

ஈரோடு

தேர்தல் பணியாற்றவுள்ள ஊழியர்களுக்கு நடந்த பயிற்சி முகாம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி  பிப்.10 இல் தொடங்கியது

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி, புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஈரோடு மாநகராட்சியில் 443 வாக்குசாவடி மையங்கள், 4 நகராட்சிகளில் 153 வாக்குசாவடி மையங்கள், 42பேரூராட்சிகளில் 655 வாக்குசாவடி மையங்கள் என மொத்தம் 1251 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து வாக்குசாவடியில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கு முதல் கட்ட பயிற்சி அந்த ஜனவரி 31ஆம் தேதி நடைபெற்றது.இந்நிலையில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி இன்று தொடங்கியது.

இதில் மாநகர் பகுதியில் 443 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் மாநகராட்சி பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி ஈரோடு ரங்கம்பாளையத்தில் ஆர் .என் .எம். கல்லூரி மற்றும் அதே பகுதியில் உள்ள கொங்கு மெட்ரிகுலேஷன் பள்ளி என இரண்டு இடங்களில் நடந்தது.
இதேபோல் பவானி நகராட்சியில் தேர்தல் பணிக்கு ஈடுபடும் ஊழியர்களுக்கு விஜயலட்சுமி கல்யாண மண்டபத்திலும், கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வைரவிழா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சத்தியமங்கலத்தில் நகராட்சித் தேர்தலில் ஈடுபடும் ஊழியர்களுக்கான பயிற்சி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பஞ்சாயத்து பள்ளியிலும் பயிற்சி தொடங்கியது. இதைப்போல் 42 பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அந்தந்த பள்ளிகள், கல்லூரிகளில் பயிற்சி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், ஈரோடு மாநகராட்சியில் ஒரு வார்டுக்கும், பேரூராட்சியில், 20 வார்டுக்கும் போட்டியின்றி கவுன்சிலர் தேர்வு செய்யப்பட்டனர். இதனால், இவர்களுக்கான, 30 ஓட்டுச்சாவடிகள் தேவையற்றதாகி விட்டது. தற்போது 1,221 ஓட்டுச்சாவடிகளில் மட்டுமே தேர்தல் நடக்கிறது.
தவிர, முதற்கட்ட பயிற்சியில் வாக்காளர் விரலில் மை வைத்தல் உள்ளிட்ட சில பணி செய்வோருக்கு பயிற்சி வழங்கியதால், குறிப்பிட்ட நபர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கவில்லை. இதனால் இன்று, 14 இடங்களில் நடக்கும் பயிற்சியில், 4 ஆயிரத்து, 395 பேருக்கு மட்டும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இன்று பயிற்சியில் கலந்துகொள்ளும் ஊழியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பயிற்சி தேர்தலுக்கு முதல் நாளான, 18 ல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top