கோவில் பூசாரிகள் நலச் சங்கம் ஏற்கெனவே அறிவித்தபடி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் (16/02/2022) சென்னையில் கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் பி.வாசு, மாநில பொருளாளர் கே..சுந்தரம் பூசாரியின் குரல் மாத இதழ் ஆசிரியர் புருசோத்தமன் , மத்திய சென்னை பொறுப்பாளர் என்.ஜி. பிரபு , கோபால்சாமி மற்றும் பூசாரிகள் சென்னை முழுவதும் உள்ள திருக்கோயில்களுக்கு சென்று பூசாரிகளை சந்தித்து நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டி துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தனர்..
சென்னையில் உள்ள பிராட்வே பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு அவரோடு இணைந்து பிரசார பயணத்தில் பங்கேற்றனர்..