Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

பாக் ஜலசந்தி பகுதியை தடைசெய்யப்பட்ட அறி வலை பயன்படுத்தாத பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர்

மீனவர் சங்க தஞ்சைமாவட்ட செயலாளர் நா.காளிதாஸ்

பாக் ஜலசந்தி பகுதியை தடைசெய்யப்பட்ட அறி வலை பயன்படுத்தாத பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியூசி மீனவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி மீனவர் சங்க மாவட்ட செயலாளர் ந. காளிதாஸ் வெளியிட்ட அறிக்கை: பாக் ஜலசந்தி பகுதியில் கடல் வளத்தை கெடுக்கின்ற வகையில் தடை செய்யப்பட்ட மடிவலைகளை பயன்படுத்துவதால் மீன் வளம் கடுமையாக அழிந்து போகின்ற சூழ்நிலையும், மீன் வளர்வதற்கான வாய்ப்பின்றி தரிசு நிலம் ஆகிவிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மடிவலைகளை பயன்படுத்துவதால் பல்வேறு மீன் வகைகள் முற்றிலுமாக அழிந்து போவதுடன் மீனவர்கள் வாழ்வாதாரம் பெரிதாக பாதிக்கப்படுகிறது. அதனைச் சார்ந்த சிறு தொழில்களும், அதனை நம்பி இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான மீனவ மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே தமிழ்நாடு அரசு பாக் ஜலசந்தி பகுதியில் மீன்வளத்தை பாதிக்கின்ற தடை செய்யப்பட்ட. அறி வலைகளை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதுடன், அறி வலைகள் பயன்படுத்தாத பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திட வேண்டுகிறோம்.

விசைப்படகுகள் ஒரு வழி பாதையில் தான் செல்ல வேண்டும், இரட்டை மடி,ரேஸ்மடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவது முற்றிலுமாக தடை செய்யப்பட்ட நாட்டுப் படகு மீனவர்களுக்கு பாதுகாப்பான 1983 ஆண்டு மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டுகிறோம். இரவு நேரத்தில் அறி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதை முழுமையாக தடுக்க வேண்டும்.

இரவு மற்றும்பகல் நேரத்தில் ஐந்து மைல் கல்லுக்குள் மீன் பிடிக்கும் விசைப்படகு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைப்படகு தவறான செயல்முறைகளால் சிறு தொழில் செய்யும் வலைகளை அறுத்து நாசப்படுத்தி விடுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுவதுடன், இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுகிறோம் என்று மீனவர் சங்க மாவட்ட செயலாளர் நா.காளிதாஸ் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.


கி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top