Close
ஏப்ரல் 5, 2025 11:33 மணி

சிவகங்கையில் போலீஸாரைக் கண்டித்து பத்திரிகையாளர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை

சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள்

காவல்துறையைக் கண்டித்து சிவகங்கையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கையில், காவல்துறையையும்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது, உதவி செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்  பத்திரிகையாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த மாதம் 24 -ஆம் தேதி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்தார். அப்பொழுது , அங்கு  சென்ற பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்கவிடாமல் காவல்துறை ஆய்வாளர் தடுத்து தகாத வார்த்தைகளால் பேசினார்.

இதனைக் கண்டித்து, சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்திரிகையாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், உதவி மக்கள் தொடர்பு அலுவல ராக பணிபுரியும் ராஜா செல்வம், பத்திரிகையாளர் களிடம் சமாதானம் பேச வந்த போது, பத்திரிகையாளர்களிடம் தேவையில்லாத கேள்விகள் எழுப்பியதால், பத்திரிகையாளர் களுக்கும் உதவி மக்கள் தொடர்பு அலுவலருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அதன் பின் சமாதானமடைந்த பத்திரிக்கையாளர்களை,
காவலர்கள் மாவட்ட எஸ்.பியிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top