Close
நவம்பர் 22, 2024 2:13 காலை

பி.கே. மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

சென்னை

மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவரான பி.கே.மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவினையொட்டி அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக உசிலம்பட்டி தொகுதியில் ஐந்து முறை தொடர்ச்சியாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் பி. கே .மூக்கையா தேவர்.
பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவருடன் இணைந்து குற்றப்பரம்பறையினர் சட்டங்களை எதிர்த்தும், கள்ளர் இன மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து போராடியவர் பி. கே. மூக்கையா தேவர். திருவொற்றியூர், மணலி, எண்ணூர் பகுதிகளில் உள்ள தேவர் பேரவைகள் சார்பில் மூக்கையா தேவரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிய பி. கே. மூக்கையா தேவரின் தியாகத்தை போற்றும் வகையில் அவரது சொந்த ஊரான உசிலம்பட்டி யிலோ அல்லது சென்னையிலோ நினைவு மணி மண்டபம் அமைக்க வேண்டும்.
அவரது பெயரில் தபால்தலை வெளியிட வேண்டும். சீர்மரபினர்  இன மக்களின் உரிமைகளை காத்திடும் வகையில் இட ஒதுக்கீடு பிரச்சனையில் சமூக நீதி காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சு.ராஜேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் டாக்டர் பி.வி கதிரவன், பி. கே .எம். முத்துராமலிங்கம், முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சே.ராஜேந்திரன்.
நடிகர் ராஜேஷ்,  தொழிலதிபர் ஜி. வரதராஜன், பி. ராஜேந்திரன்,  தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் தலைவர் டி. செல்வம்,  தேவர் பேரவை நிர்வாகிகள்  பாலம் இருளப்பன், துரைப்பாண்டி, சத்தியமூர்த்தி சரவணன், விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top