Close
செப்டம்பர் 20, 2024 3:49 காலை

மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து வசதி… இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கக்கூட்டம்

மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து வசதி செய்ய வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் எளிதாகச் சென்று வரும் வகையில் காலையும், மாலையும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றியப் பேரவைக்கூட்டம் கந்தர்வகோட்டையில் நடைபெற்றது.

பேரவைக்கு மாவட்ட துணைச் செயலாளர் ச.பிரியங்கா தலைமை வகித்தார். வலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அ.சந்தோஷ்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பேரவையை நிறைவு செய்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தன் உரையாற்றினார்.

பேரவையில்  சங்கத்தின் ஒன்றியத் தலைவராக மதன், செயலாளராக ஹரிராமகிருஷ்ணன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. இந்தப் பேரவையில் 7 கல்வி நிலையங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் எளிதாகச் சென்று வரும் வகையில் காலையும், மாலையும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். கல்வி நிலையங்களில் பாலியல் சீண்டல் களில் இருந்து மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top