Close
அக்டோபர் 6, 2024 11:14 காலை

ஒன்றிய இணை அமைச்சரை பதவி நீக்கம் செய்யக் கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சையில் அனைத்து தொழில்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

உபி லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலைக்கு காரணமான ஒன்றிய இணை அமைச்சரை பதவி நீக்கம் செய்யாத  ஒன்றிய அரசை கண்டித்து அனைத்துதொழிற் சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு தழுவிய கருப்பு கோடி ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். புதிய மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தலைநகர் தில்லியில் பல்வேறு அடக்குமுறை களையும் எதிர்கொண்டு, இரவு பகல் பாராது, வெயில், பனி, மழை பாராது விவசாயிகள் போராடிக் கொண்டிருந்த விவசாயிகளுக்கு ஆதரவாக, உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் மிகப்பெரிய விவசாய போராட்டம் நடைபெற்றது.

அக்டோபர் 3 -ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியும்,அவரது மகனும் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது காரை ஏற்றி ஒரு பத்திரிக்கையாளர் உள்ளிட்ட 9 பேரை படுகொலை செய்தனர்.  இதுநாள் வரை ஒன்றிய இணை அமைச்சரும், அவரது மகனும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் மீது வழக்கு பதிவு எதுவும் இல்லை .

இந்த நிலையில் விவசாயிகள் படுகொலைக்கு காரணமாக இருந்த ஒன்றிய இணை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவர் மீது வழக்கு பதிவு செய்து, தண்டனை வழங்க வேண்டும், ஒன்றிய பிரதமர் மோடி விவசாயிகள் போராட்டத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்த உறுதிமொழி அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 3 -ஆம் தேதி லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலை தினமான இன்று அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஒன்றிய பிரதமர் மோடி அரசை கண்டித்து நாடு தழுவிய கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அழைப்பை ஏற்று இன்று 3.10.2023 காலை 10 மணிக்கு தஞ்சாவூர் ரயிலடி முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர், ஏஐடியூசி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம், சிஐடியு மாநில செயலாளர் சி. ஜெயபால், ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் ஏ.ரவி, ஏ ஐ சி சி டி யூ மாவட்ட செயலாளர்கே. ராஜன்,

ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் சு.பழனி ராஜன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், மாவட்ட தலைவர்கள் ஆர்.ராமச்சந்திரன் பி.செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சோ.பாஸ்கர், நிர்வாகி சுரேஷ், ஜனநாயக விவசாய சங்க மாவட்ட செயலாளர் இரா. அருணாச்சலம் , மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன்.

கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி ராமசாமி, தொமுச விவசாய அணி நிர்வாகிகள் கோவிந்தராஜ், சைவராஜ், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சி.பக்கிரிசாமி, ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. சந்திரகுமார்.

தொமுச மாவட்ட தலைவர் வை.செல்வராஜ், ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் பி.செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அனைத்து சங்க நிர்வாகிகள் பாஸ்டின், கிருஷ்ணமூர்த்தி, குமரேசன், பாரி, நீல நாராயணன், விஜயகுமார், ராஜேந்திரன், தி.கோவிந்தராஜன், துரை.மதிவாணன்,

வெ.சேவையா, பி.அப்பாதுரை, காளிதாஸ், கோ.மணி மூர்த்தி, ஆர் பி. முத்துக்குமாரன், கே. அன்பு , பேர்நீதி ஆழ்வார்,ராஜா, இடிஎஸ் மூர்த்தி முருகேசன், வீரையன், மதியழகன், பி.செல்வம், ஏ.ரவிச்சந்திரன், க.சரவணன், சசிகலா, முத்துகிருஷ்ணன், அறிவழகன், ஜெயபால், ரகுநாதன், ராவணன், தேவா, சாம்பான், டி.கஸ்தூரி,விசிறி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

# செய்தி: துரை.மதிவாணன் #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top