கடந்தாண்டு நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகை மற்றும் வறட்சி நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயம் சங்கத்தினர் திங்கள்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வழக்கத்தை விட மழையளவு குறைவாகவே பதிவாகியுள்ளது காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப் பட்டு உள்ளது பயிர் காப்பீட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
அரசு அறிவித்த வரட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை இதுவரை விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை உள்ளது. இதனைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 30 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இந்த நிலை நீடித்தால் மாவட்ட முழுவதும் விவசாயிகள் ஒன்று திரண்டு முற்றுகைப் போராட்டம் தொடரும் எனவும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு அனைத்து விவசாயிகளுக்கும் உரிய பயிர் காப்பீட்டு தொகையையும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரை சந்திக்க அழைத்துச் சென்று பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் பயிர் காப்பீடு நிதியை வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.