Close
அக்டோபர் 5, 2024 6:43 மணி

சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு: டிச.10 வரை நீட்டிக்க கோரிக்கை

தஞ்சாவூர்

விவசாயிகள் கோரிக்கை

சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 22 என்பதை டிசம்பர் 10 வரை நீட்டிக்க  வேண்டுமென ஜனநாயக விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளது.

ஜனநாயக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் இரா.அருணாச்சலம்  வெளியிட்ட அறிக்கை:  தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்டு காவிரி டெல்டா பகுதிகளில் நடப்பாண் டில் சாகுபடி செய்யப்பட்ட குறுவைப் பயிர் போதிய தண்ணீர் வரத்தின்றி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கர்  சேதமடைந்துள்ளது.

இதனால் விவசாயிகள் கடனாளியாகவும் மாறியுள்ளனர். இந்நிலையில் சம்பா  சாகுபடிக்காக  போதிய தண்ணீர் கிடைக்காததால், சம்பா பருவ சாகுபடி தாமதமாக செய்யப் பட்டு வருகிறது.

இந்நிலையில் சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 வரை செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. பயிர் காப்பீடு செய்வதற்கான சிட்டா அடங்கல் பெறுவதற்கு பண்டிகை விடுமுறை மற்றும் நிர்வாக காரணங்களினால் விவசாயிகள் அலைக்கழிக்கப் படுகின்றனர்.

தற்போது மழை பெய்து வருவதாலும், காவிரியில் தண்ணீர் ஓரளவு வருவதை நம்பியும் விவசாயிகள் சம்பா சாகுபடிக் கான வேலைகளின் இறங்கி உள்ள நிலையில்                  நவம்பர் 15  -ல்  பயிர் காப்பீடு செய்வதற்கான காலக் கெடுவை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தர வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

நிலையில் பயிர் காப்பீட்டிற்கான தேதி நவம்பர் 22 வரை செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த காலக்கெடு நீட்டிப்பு அறிவிப்பிற்கு ஜனநாயக விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போதும் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் சிட்டா- அடங்கள் பெறுவதற்கும், புயல் மழை வெள்ளம் போன்ற பல்வேறு காரணங்களினாலும் பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவினை நவம்பர் 22 -ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டித்துத்தர வேண்டும்.

பயிர் காப்பீடு செய்ய தனியார் நிறுவனங்களை தவிர்த்து, எல்ஐசி உள்ளிட்ட அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வரும் ஆண்டிலிருந்து பயிர் காப்பீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வரையும், தமிழ்நாடு அரசையும் ஜனநாயக விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top