Close
ஜூலை 7, 2024 10:19 காலை

தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி மேம்பாலத்தை சீரமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம்

தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டி மேம்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வாசு இளையராஜா தலைமையில் நடைபெற்ற தஞ்சாவூர் தெற்கு  மாவட்ட நிர்வாக குழு மற்றும் இடைச் செயலாளர்கள் கூட்டத் தில் இந்தக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

 தஞ்சாவூர் கீழ ராஜ வீதி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்  மாவட்ட செயலாளர் முத்து உத்தராபதி நடை பெற்ற பணிகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செங்கிப்பட்டி மேம்பாலம் பழுதடைந்து சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. இந்த வழியாக செல்கின்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள், பேருந்துகள் மற்றும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும், பாலத்தின் கீழ் வழியாக செல்கின்றவர்கள் எந்த நேரத்திலும் பாலம் இடிந்து விழலாம் என்ற அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். அபாயம் நிறைந்த மோசமான விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள பாலத்தை உடனடியாக தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் புதுப்பித்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.  மேம்பாலம் சீராகும் வரை வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடியில் இந்த வழியாக செல்கின்ற எந்தவித வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது.

தஞ்சாவூர் -திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் மேம்பாலம் சீரமைக்கும் பணிகள் மற்றும் சுங்க கட்டணம் வசூலிப்பது தடை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளில் உரிய கவனம் செலுத்தி ஆவணசெய்ய வேண்டும்.

சம்பா சாகுபடிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் செங்கிப் பட்டி வருவாய்க்குட்பட்ட பூதலூர் வட்டம் மற்றும் சேதுபா சத்திரம், மதுக்கூர், பேராவூரணி உள்ளிட்ட கடை மடை பகுதிகளில் சம்பா சாகுபடி முழுமையாக பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை தமிழ் நாடு அரசு வழங்க வேண்டும்.

ஆழ்குழாய் கிணறு அமைத்து இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்து சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக் கும் விவசாயிகளுக்கு, இலவச மின்சாரம் வழங்கிட தமிழ்நாடு மின்சார வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கடலை,உளுந்து, பயறு உள்ளிட்ட விதைப் பயிர்கள் தட்டுப் பாடின்றி கிடைக்க வேளாண்மை துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட திருவோணம் ஒன்றியத்தை தாலுகா என அறிவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தாலுகா விற்குரிய எந்தவித நிர்வாக நடவடிக்கையும் இதுநாள் வரை மேற்கொள்ள வில்லை.

உடனடியாக பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் திருவோணம் தாலுகாவிற்குரிய நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசையும், தஞ்சை மாவட்ட நிர்வாகத்தையும் இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

கோயில் நிலத்தில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்கிட வேண்டி பல ஆண்டுகளாக விண்ணப்பித்தும் போராடியும் வந்துள்ள நிலையில் , இவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.

குடியிருந்து வருபவர்களுக்கு மின் இணைப்பு,குடிநீர் வசதி செய்து தர வேண்டும். மேலும் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டத்தில்  வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், நிர்வாகிகள்  ஆர். இராமச்சந்திரன், சி.சந்திரகுமார்,  சோ. பாஸ்கர், சி. பக்கிரிசாமி, தி.திருநாவுக்கரசு, ஆர்.ஆர்.முகில், வெ.சேவையா, ம.விஜயலட்சுமி, டி.கண்ணகி, அ.கலியபெருமாள், பூபேஸ்குப்தா, கருப்பையா, பால்ராஜ், தட்சிணாமூர்த்தி, ஆர்.பிரபாகர், முத்துராமன் உள்ளிட்டார் கலந்து கொண்டனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top