Close
ஜூலை 4, 2024 5:24 மணி

மயிலாடுதுறை- திருநெல்வேலி- செங்கோட்டை ரயில் ஆலக்குடி, ஐயனாபுரம், சோளகம்பட்டி ஊர்களில் நின்று செல்ல கோரிக்கை

தஞ்சாவூர்

ஐய்யானபுரம் ரயில் நிலையம்

மயிலாடுதுறை- திருநெல்வேலி- செங்கோட்டை ரயில் ஆலக்குடி, ஐயனாபுரம், சோளகம்பட்டி ஊர்களில் நின்று செல்ல வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் இரயில்கள் முழுமையாக இயக்க வேண்டுமென  திருச்சி இரயில்வே கோட்ட மேலாளருக்கு உலகத்தமிழர் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூர்
ஐயனாபுரம் சி. முருகேசன்

உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் ஐயனாபுரம் சி. முருகேசன்,  திருச்சி இரயில்வே கோட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்  குறிப்பிட்டிருப் பதாவது:

ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப் பட்ட தென்னக ரயில்வேயில் திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறைக்கு இயக்கப் பட்ட ரயில்கள் அனைத்து கிராம ரயில்வே நிலையங்களில் நின்று,சென்று கொண்டிருந்தது.

கடந்த கொரோனா காலகட்டத்தில் பொதுமுடக்கம் ஏற்பட்ட பொழுது விரைவு ரயில், பயணிகள் ரயில் அனைத்தும் நிறுத்தப்பட்டது. பொதுமுடக்கம் தளர்த்தப்பட்ட பிறகு இயல்பு நிலை திரும்பியது. தமிழ்நாட்டில் பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளும் வழக்கம்போல் இயக்கப் பட்டன.

ஆனால் திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை இயக்கப்பட்ட பயணிகள் ரயில்கள் பெரும்பாலும் குறைக்கப்பட்டன. பல்வேறு கோரிக்கைகள், வலியுறுத்தல்களுக்கு பிறகு குறிப்பிட்ட ரயில்கள் இயக்கப்பட்டது. விரைவு ரயில்கள் கிராம நிலையங் களில் நிற்காது சென்ற நிலையில் பயணிகள் ரயில் அனைத்து ஊர்களிலும் நின்று சென்றது.

தற்போது இந்த நிலையில் திருச்சி தஞ்சாவூர் இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் குறைவாக இயக்கப்படு வதால் சோளகம்பட்டி, அய்யனாபுரம் ,ஆலக்குடி உள்ளிட்ட அனைத்து ஊர் மக்களும் பாதிக்கப்பட்டனர். பல்வேறு பணிகளுக்கு சென்று வருபவர்கள், மருத்துவ சிகிச்சைக்காக செல்பவர்கள்,பள்ளி- கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காலையில் திருச்சியில் இருந்து புறப்பட்டு வருகின்ற பயணி ரயில்கள் நான்கும் கலை 8.30 மணிக்குள்ளாக தொடர்ச்சி யாக சென்று விடுவதால் ரயில் இல்லாதும், பேருந்துகள் வசதி இல்லாமலும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர்  தொடர்ச்சியாக காலையில் செல்லும் இரயில்களை அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை என்று இயக்குவதற்கு நடவடிக் கை எடுக்க வேண்டும்.

குறிப்பிட்ட அரசு விரைவு ரயில்கள் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி வரும் போதும், செல்லும் போதும் ஆலக்குடி, ஐயனாபுரம் உள்ளிட்டு அனைத்து கிராம இரயில் நிலையங் களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் முழுமையாக இயக்க வேண்டும்.

உடனடியாக மயிலாடுதுறை, திருநெல்வேலி, செங்கோட்டை, பாசஞ்சர் ரயில்கள் தற்போது இந்த ஊர்களில் நிற்பதில்லை, இவைகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து இந்த பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்று சேர்ந்த தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம்  முறையிட்டுள்ளார்கள். பாராளு மன்ற உறுப்பினரும் திருச்சி கோட்ட மேலாளரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

உடனடியாக தென்னக ரயில்வே பொறுப்பில் உள்ள திருச்சி கோட்ட மேலாளர் அனைத்து தரப்பு பொதுமக்களின் சிரமங்களைப்புரிந்து கொண்டு, தற்போது பொங்கல் பண்டிகைக்காக கிராமங்களுக்கு வந்துள்ளவர்கள், திரும்பி ஊர் செல்ல வசதியாகவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது கோரிக்கை மனுவில் ஐயனாபுரம் சி.முருகேசன் தெரிவித்துள்ளார். .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top