Close
நவம்பர் 21, 2024 11:41 மணி

திருவொற்றியூரில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

சென்னை

திருவொற்றியூரில் நடைபெற்ற மாநகராட்சி மண்டல பகுதி சபா

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூரில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம் 12 -வது வார்டுக்கு உள்பட்ட பகுதி சபை கூட்டம் வெள்ளிக்கிழமை மாமன்ற உறுப்பினர் கவி கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பொதுமக்கள்  கூறியதாவது: திருவொற்றியூர் பகுதியில் எங்கு பார்த்தாலும் மாடுகள் சாலைகள், தெருக்களில் சுற்றித் திரிகின்றன.  இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதோடு மாட்டுச் சாணங்களால் சீர்கேடு ஏற்படுகிறது .எனவே சுற்றித் திரியும் மாடுகளை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை
சாலையில் திரியும் மாடுகள்
ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ள மாட்டு மந்தை பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும். குடிநீர் குழாய், தெரு விளக்கு கம்பி வடங்களை பதித்த பிறகு புதிய சாலைகளை அமைக்க வேண்டும்.  கழிவுநீர் அடைப்புகள் ஏற்படாத வண்ணம் முறையாக பராமரிக்க வேண்டும்.  எங்கு பார்த்தாலும் கொட்டப்படும் கட்டட இடுப்பாடுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
பொதுமக்கரை அச்சுறுத்தும் விதமாக கண்ட இடங்களில் மது அருந்துவது,  கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களைப் பயன்படுத்துவது தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரசுக்குச் சொந்தமான இடங்களில் நீண்ட காலம் குடியிருக்கும் பொது மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ரேஷன் கடைகளை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  இதற்கு பதில் அளித்து பேசிய 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கவி கணேசன் பொதுமக்களின் புகார்கள் குறித்த மனுக்கள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் அனைத்து பணிகளும் முடித்து தரப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் உதவி பொறியாளர்கள் விஜய நிர்மலா, கமலக்கண்ணன், பகுதி சபை உறுப்பினர்கள் வீ.சதீஷ்குமார் நிர்வாகிகள் எம். வி. குமார், சைலேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top