Close
மே 13, 2024 2:14 மணி

கீரனூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி: அமைச்சரிடம் எம்.சின்னதுரை எம்எல்ஏ கோரிக்கை

சென்னை

உயர்கல்வித்துறை அமைச்சரிடம் மனு அளித்த கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை

நடப்பு நிதியாண்டிலேயே புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டுமென எம்.சின்னதுரை எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார்.

கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியனுடன் இணைந்து, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ.கண்ணப்ப னிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்ப தாவது:

கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீரனூர் பேரூராட்சியை சுற்று நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கீரனூர் பேருராட்சி மன்றும் சுற்றுவாட்டராத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பொருளாதாரத் தில் மிகவும் பின்தங்கிய பகுதியினராக உள்ளனர்.

இப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறுகின்றனர். இவர்கள் உயர்கல்விக்காக திருச்சி அல்லதுபுதுக்கோட்டைக்கு பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால், பல பின்தங்கிய குடும்பத்து மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பில் சேர முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, கிராமப்புற மாணவிகள் உயர்கல்வி பயில முடியாமல் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

கீரனூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வலியுறுத்தி இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். நானும் சட்டப்பேரவையில், இதுகுறித்த கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வருகின்றேன்.

குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுவிலும் இங்கு கல்லூரி அமைக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது. கீரனூர் அருகே கல்லூரி தொடங்குவதற்குத் தேவையான அரசுப் புறம்போக்கு நிலங்கள் அதிகளவு உள்ளன.

எனவே, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டும், அவர்கள் உயர் கல்வி பெறுவதற்கு ஏதுவாகவும் கீரனூரில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நடப்பு நிதியாண்டிலேயே தொடங்குவதற்கு தாங்கள் அவசர நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top