Close
நவம்பர் 21, 2024 11:39 மணி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 58 ஆயிரம் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு மின்சார ஓய்வு பெற்ற தொழிலாளர் அசோசியேஷன் சங்கத்தின் கிளை கூட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 58 ஆயிரம் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப  வேண்டுமென  தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு மின்சார ஓய்வு பெற்ற அசோசியேஷன் தொழிலாளர்  சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின்சார ஓய்வு பெற்ற தொழிலாளர் அசோசியே ஷன் சங்கத்தின் தஞ்சை கிளை கூட்டம்  தலைவர் சி.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

மின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவர் பொன். தங்கவேல் கூட்டத்தில் பங்கேற்று பேசிய போது மின் வாரியத்தில் அலுவலர்கள் , தொழிலாளர்களின் கூடுதல் பணிச்சுமை, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது, ஒன்றிய அரசின் கொள்கைகளால் ஏற்படும் தனியார்மய நடவடிக்கைகள் பற்றியும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் விரிவாக பேசினார்.

கூட்டத்தில் கிளை துணைத் தலைவர் ஆர். சோமசுந்தரம், மாநில துணைத்தலைவர் கே. லட்சுமணன், நிர்வாகிகள் பி.மனோகரன், கே. சின்னையன் உள்ளிட்டார் கலந்து கொண்டனர் .

தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மின்வாரியத் தில் காலியாக உள்ள 58 ஆயிரம் பணியிடங்களை உடனடி யாக நிரப்பப்பட வேண்டும்.

பணியில் உள்ளவர்களின் வேலைப்பளுவை குறைக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் காப்பீடு தொடர்பான குறை பாடுகள் களையப்பட வேண்டும்.

மின்வாரியம் ஏற்கெனவே தமிழ்நாடு மின்வாரிய கம்பெனி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டது. தற்போது மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை அனல் மின் உற்பத்தி கார்ப்பரேசன், மின் பகிர்மான கார்ப்பரேஷன் என இரண்டாகப் பிரிப்பதுடன் மூன்றாவதாக பசுமை மின் உற்பத்தி கார்ப்பரேசன் என மூன்றாக பிரிப்பதற்கு அரசாணை கடந்த ஜனவரி 24 ம் தேதி வெளியிடப்பட்டது.

தற்போது மூன்று பிரிவுகளை கம்பெனி சட்ட அடிப்படையில் பிரிக்கும் போது பணி புரியும் தொழிலாளர்கள், அலுவலர்கள் தற்போது பெற்று வரும் உரிமைகள், சலுகைகளை தொடர்ந்து பெறவேண்டும். அவைகளை பறிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top