பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து புதுக்கோட்டை திலகர் திடலில் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்: இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையை உடனடியாக வெளியிட வேண்டும்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் மக்களுடன் முதல்வர் மற்றும் முதல்வரின் முகவரி போன்ற அரசின் திட்டப்பணிகளில் அதீத பணி நெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.
அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து இந்த உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தால் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
கோரிக்கைகள் நிறைவேறாவிடில் காலவரையற்ற வேலை நிறுத்தம்:
எந்தவிதமான கோரிக்கைகளையும் நிறைவேற்றப் படவில்லை முதல் கட்டமாக உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகிறோம் அடுத்தகட்டமாக வருகின்ற 22 -ஆம் தேதி அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் தொடர் காத்திருப்பு போராட்டமும் அதனை தொடர்ந்து 27 -ஆம் தேதி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடப் போவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.